சூப்பர் சிங்கர் சாய் சரணுக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்..! நேரில் வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்..!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பாடகர் சாய் சரணுக்கு மிக பிரமாண்டமாக இன்று திருமணம் நடந்துள்ளது. இவரது வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக பலர் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பிரபலமானவர்களின் ஒருவர் புதுச்சேரியை சேர்ந்த சாய் சரண்.
இவருக்கும் மீரா என்கிற பெண்ணுக்கும் சமீபத்தில் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தற்போது திருமணம் ஆகியுள்ளது.
பிரமாண்டமாக நடந்த இவர்களது திருமண வரவேற்ப்பில், விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலங்கள், பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர்.
அதே போல் விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் சாய் சரண் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டுள்ளார்.
தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை ஈர்த்து, இன்று பின்னணி பாடகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சாய் சரண்.
. ஜூனியர் - சீனியர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு பல பாடல்களை பாடியுள்ளார்.
இவருடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.