- Home
- Cinema
- Nayanthara Vs Rachitha: மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!
Nayanthara Vs Rachitha: மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!
விஜய் டிவி தொலைக்காட்சியில் (vijay tv serial) ஒளிபரப்பான, முன்னணி சீரியலான 'சரவணன் மீனாட்சி' (Saravanan Meenaatchi) மற்றும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' (Naam iruvar namakku iruvar) ஆகிய தொடர்களில் நடித்த ரக்ஷிதா மகாலட்சுமி... மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகைகள் கூட தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.
இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலில் விதவிதமாக புடவை கட்டி, அழகாக நகைகள் அணிந்து அழகு பதுமைகள் போல் வலம் வரும் பிரபல சீரியல் நடிகைகள் பலரும், இன்ஸ்டாகிராமில் ஹாட் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இதில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரக்சிதா நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் இல்லத்தரசிகளிடம் செம்ம ரீச்சானது.
இதை தொடர்ந்து மற்ற சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த ரஷிதா, மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இருவர் நமக்கு இருவர்' சீரியலில் நடித்தார்.
சமீபத்தில் பட வாய்ப்பு கிடைத்ததால், அந்த சீரியலில் இருந்தும் விலகினார். தற்போது... 'நாம் இருவர் நமக்கு இருவர் ' சீரியலில் ஹீரோயினாக அரண்மனை கிளி சீரியல் நடிகை ஜானு நடித்து வருகிறார்.
பட வாய்ப்பை கைப்பற்றியதில் இருந்து விதவிதமாக போட்டோ ஷூட் வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும் ரஷிதா தற்போது யாரும் எதிர்பாராத கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
அந்த வகையில் நடிகை நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது ரஷிதா சீரியல் ஒன்றில் அம்மன் கெட்டப்பில் கெட்ஸ்ட் ரோலில் நடிக்கிறாராம், அதில் நடித்த போது தான் இந்த புகைப்படங்கள் எடுக்க பட்டுள்ளது. சிவப்பு நிற சேலையில்... பச்சை நிற ஜாக்கெட் ஜொலிக்கும் நகைகள் என இந்த புகைப்படத்தில் கலக்கி உள்ளார்.
மேலும் 'நான் அம்மனாக ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறேன். எந்த சீரியல் என்று கண்டு பிடியுங்கள்... இனி சீரியலில் அம்மன் ரோல் என்றாலே எனக்கு இந்த ரோல்னு பிராண்டு பண்ணிடலாம். எது எப்படி இருந்தா என்ன, எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் எந்த சீரியல்ல இந்த அம்மன் ரோல்ல நடிக்கறேன்னு சொல்லுங்க பார்க்கலாம், கண்டிப்பா அம்மன் சீரியல் இல்லை” என்று தனது கேப்ஷனுடன் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.