விஜய் டிவி சீரியல் நடிகர் கொரோனா தொற்றால் மரணம்? அடுத்தடுத்து அதிர வைக்கும் பிரபலங்கள் இழப்பு!
விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவர் சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த குத்தி ரமேஷ் காலமானார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்குமே ஒரே மாதிரி இல்லாமல் புதிய புதிய கதைக்களத்துடன் ஓடி வருவதால், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகியுள்ள தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர். ஈந்த சீரியல் பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் ஜாக்குலின் அப்பாவாக நடித்து வருபவர் குட்டி ரமேஷ். இவர் இறந்து விட்டதாக விஜய் டிவி சமூக வலைதள பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவருடன் தேன்மொழி பி.ஏ சீரியலில் நடித்து வந்த எலிசபெத், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவருக்கு இரங்கல் தெரிவித்து போட்ட பதிவில், ரசிகர் ஒருவர்... குட்டி ரமேஷுக்கு என்ன ஆனாது? என கேட்டபோது, கடந்த சில நாட்களாகவே அவருக்கு நுரையீரல் தொற்று இருந்து வந்ததாகவும், ஆச்சிஜன் தேவையும் இருந்தது. இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வான்ஹ இவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும் மூச்சி திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதால், கொரோனா தொற்று காரணமாக இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இவருடன் சீரியலில் நடித்து வரும் சகா நடிகையான கம்மம் மீனாவும் உருக்கமாக தன்னுடைய இரங்கலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.
சுமார் 20 வருடங்களுக்கு மேல், பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் குட்டி ரமேஷின் இழப்பு, சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.