செல்ல மகனை மார்போடு அணைத்த படி மைனா நந்தினி... முதன் முறையாக குழந்தையின் பெயருடன் வெளியான க்யூட் போட்டோஸ்...!
மைனா நந்தினி - யோகேஸ்வரன் தம்பதி தனது மகனின் முகத்தை முதன் முறையாக ரசிகர்களுக்கு காட்டியதோடு, பெயரையும் அறிவித்துள்ளனர்.
‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்
நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி
ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா
என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை
மிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள்,
கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி,
டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.
முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு சின்னத்திரையை விட்டு
சிறிது காலம் விலகி இருந்த மைனா நந்தினி, மீண்டும் நடிக்க
வந்தார். சக நடிகரான யோகேஸ்வரனுடன் காதல் மலர அவரை
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் செய்து
கொண்டார்.
கர்ப்பமாக இருந்த மைனா நந்தினிக்கு சமீபத்தில் தான் ஆண்
குழந்தை பிறந்தது. மகனின் போட்டோவை வெளியிடும் படி பல
நாட்களாகவே ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் முதன் முறையாக செல்ல மகனின் புகைப்படத்தை
வெளியிட்டுள்ள மைனா நந்தினி குழந்தையின் பெயரை
அறிவித்துள்ளார்.
செல்ல மகனை மார்போடு அணைத்த படி புகைப்படம்
வெளியிட்டிருக்கும் மைனா நந்தினி, குழந்தைக்கு துருவன் என
பெயரிட்டுள்ளதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் மைனா நந்தினி - யோகேஸ்வரன் காதல் தம்பதி தனது
செல்ல மகளுடன் எடுத்துள்ள முதல் குடும்ப புகைப்படமும்
சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிறந்து சில மாதங்களே ஆன மைனா நந்தினின் மகனை பார்த்த குஷியில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.