விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகை திடீர் மாற்றம்... குழப்பத்தில் ரசிகர்கள்...!
ஆனால் அதிரடி மாற்றமாக நாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகை திடீரென மாற்றப்பட்டது புரியாத புதிராக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் “ஈரமான ரோஜாவே”. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
இதில் கதாநாயகனாக திரவியம் என்பவரும், நாயகியாக பவித்ரா ஜனனியும் நடித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை - கதிர் கதாபாத்திரம் போல் இவர்களது ஜோடியும் மிகவும் பிரபலமானது.
இந்த சீரியல் நாயகனும் நாயகியும் இப்போது தான் ஒன்றாக இணைந்தனர். இதனால் ரசிகர்கள் பட்டாளம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
ஆனால் அதிரடி மாற்றமாக நாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகை திடீரென மாற்றப்பட்டது புரியாத புதிராக உள்ளது.
அன்புக்கரசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்து நடிகையை திடீரென மாற்றியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.