என்னது இந்த வாரமுமா?... “குக் வித் கோமாளி சீசன் 2” ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி...!
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் டி.வி. முன்னாடி காத்திருக்கும் நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் அதிக பிரபலமானவை. அப்படி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி.

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் காமெடி, பாட்டு, நடனம், டாக் ஷோ, கேம் ஷோ என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்தாலும், சமையல் ஷோவில் இவ்வளவு காமெடியா? என ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் பட்டியலில் டாப்பில் உள்ளது.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் டி.வி. முன்னாடி காத்திருக்கும் நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடப்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.
இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடங்க விழா என்பதால் 9 மணி நேரம் தொடர் ஒளிபரப்பு நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகாதாம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கடும் ஏமாற்றில் உள்ளனர்.