MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!

Vijay Sangeetha 35 Crore Settlement: தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்த வதந்திகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். தற்போது விவாகரத்து செட்டில்மென்ட் தொகை குறித்த ஒரு புதிய தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 19 2026, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் சங்கீதா விவாகரத்து
Image Credit : X

விஜய் சங்கீதா விவாகரத்து

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களைத் துல்லியமாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார்  ரூ.625 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்கள் ரூ.404 கோடி மற்றும் அசையாச் சொத்துக்கள் ரூ.220 கோடி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சங்கீதா விஜய்
Image Credit : our own

சங்கீதா விஜய்

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான உறவு குறித்து பல்வேறு யூகங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. பரவலாகப் பேசப்படும் தகவல்களின் படி, விஜய் தனது பிரமாண்ட சொத்துக்களைப் பகிரங்கப்படுத்திய நிலையில், அவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாக கூறப்படும் சங்கீதா, விவாகரத்து தீர்வாக சுமார் 250 கோடி வரை கேட்டதாக ஒரு செய்தி தீயாய்ப் பரவி வருகிறது.

34
சங்கீதா ஜீவனாம்சம்
Image Credit : Facebook/ Actor Vijay, X

சங்கீதா ஜீவனாம்சம்

இந்த தொகையானது சங்கீதாவுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோரின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இருப்பினும், இந்த விவகாரத்தில் விஜய் தரப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, மனைவிக்கு மட்டும் சுமார் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் வழங்க விஜய் சம்மதித்துள்ளதாகவும், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலச் செலவுகளைத் தானே முன்னின்று கவனித்துக் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

44
விஜய் செட்டில்மெண்ட் தொகை
Image Credit : instagram

விஜய் செட்டில்மெண்ட் தொகை

பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்ட விஜய், அவர்களைத் தனது அரவணைப்பிலேயே வளர்க்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், இந்தச் செய்திகள் எதற்கும் விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. வேட்புமனுவில் தனது மனைவியின் பெயரில் சுமார் 18 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பெரும் அளவிலான தங்க நகைகள் இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
சங்கீதா வி (தொலைக்காட்சி நடிகை)
டிவி.கே. விஜய்
தளபதி விஜய்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Recommended image2
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image3
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved