Priyanka Chopra: சமந்தா செய்த அதே செயல்... விவாகரத்து முடிவை கையில் எடுத்துவிட்டாரா பிரியங்கா சோப்ரா?
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra), தன்னை விட 10 வயது இளையவயது கணவரின் பெயரை திடீர் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருப்பதால், விவாகரத்து வதந்தி பற்றி கொண்டுள்ளது.
நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாகசைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அதனை முதலில் தெரிவிக்கும் விதமாக, சோசியல் மீடியாவில் இருந்து தன்னுடைய கணவரின் பெயரை தான் முதலில் நீக்கினார்.
இதன் மூலமாகவே இவர்களது விவாகரத்து குறித்த தகவல் சூடு பிடிக்க துவங்கியது. ஆனால் இந்த விவாகரத்து வதந்தி குறித்து, சுமார் 3 மாதத்திற்கும் மேல் வாய்திறக்காமல் இருந்த சமந்தா - நாகசைதன்யா ஜோடி, கடந்த மாதம் தான் இருவரும் பிரிய உள்ளதாக அறிவித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், சமந்தா பாணியிலேயே திடீர் என தன்னுடைய பெயரின் பின்னால் இருந்த கணவரின் சர் நேம்மை நடிகை பிரியங்கா சோப்ரா நீக்கி இருப்பது, இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளார்களா? என்கிற சந்தேகத்திற்கு வழி வகுத்துள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, விரைவில் இந்த திடீர் பெயர் நீக்கியதற்கு என்ன காரணம்? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி உடையில் தோன்றி மிரள வைக்கிறார். அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவிற்கான மவுசு நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தான் தற்போது பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் குறித்த விவாகரத்து வாந்தி பரவ துவங்கியுள்ளது. இவர்களது விவாகரத்து குறித்த வதந்தி பரவுவது இது முதல் முறை இல்லை என்றாலும், பிரியங்கா சோப்ராவே தன்னுடைய கணவரின் சர் நேம்மை நீக்கியுள்ளது தான் தற்போது உலக அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.