எச்.வினோத் பொத்தி பொத்தி பாதுகாத்த தளபதி 69 படத்தின் டைட்டில் லீக்கானது!
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் டைட்டின் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

H Vinoth, Vijay
கோலிவுட்டின் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்க, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Pooja hegde, vijay
தளபதி 69 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்திற்கு பின்னர் அவர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... தளபதி 69 கடைசி படம் இல்லயா? முடிவை மாற்றிய விஜய்: தளபதி 70 படம் உறுதி?
Thalapathy 69 Title Leaked
தளபதி 69 திரைப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வருகிற ஜனவரி 26ந் தேதி குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழு பிளான் பண்ணி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தளபதி 69 படத்திற்காக படக்குழு வைக்க உள்ள தலைப்பு என்ன என்பது குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது. இத்தனை நாட்களாக பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த டைட்டில் லீக் ஆனதால் படக்குழுவும் அப்செட்டில் உள்ளதாம்.
Thalapathy 69 Titled as Naalaiya Theerpu
அதன்படி தளபதி 69 படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எங்கேயோ கேள்விப்பட்ட டைட்டில் போல இருக்கிறதா... ஆம் இது நடிகர் விஜய்யின் முதல் படத்திற்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வைத்த டைட்டில். அதையே தற்போது அவரின் கடைசி படத்திற்கும் வைக்கலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி இப்படத்தின் கதைக்கும் அந்த டைட்டில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இயக்குனர் எச்.வினோத் இந்த டைட்டிலுக்கு ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பாலய்யாவாக மாறும் விஜய்! தளபதி 69 பட சீக்ரெட்டை பொசுக்குனு போட்டுடைத்த பிரபலம்