- Home
- Cinema
- பிப்ரவரியில் டும் டும் டும்! உதய்பூரில் கோலாகலமாக நடக்கும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்? முழு விவரம் இதோ!
பிப்ரவரியில் டும் டும் டும்! உதய்பூரில் கோலாகலமாக நடக்கும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்? முழு விவரம் இதோ!
Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Date : விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் 2026 பிப்ரவரியில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண நடைபெறும் இடம் மற்றும் முக்கிய விவரங்கள் இங்கே.

Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Date
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நீண்ட காலமாக காதலிப்பதாக செய்திகள் பரவின. இருவரும் டேட்டிங் செல்வது, வெளிநாட்டுப் பயணங்கள் என மறைமுகமாக காதலை வெளிப்படுத்தினர். 2025 அக்டோபரில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இதனால், திருமணத்தையாவது அறிவிப்பார்களா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Rashmika Mandanna Marriage Venue Udaipur
சமீபத்திய தகவல்படி, 2026 பிப்ரவரி 26-ல் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் உதய்பூரில் இந்த திருமணம் நடக்கவிருப்பதாகவும், இரு குடும்பத்தினரும் தேதியை முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்பார்கள். பின், ஐதராபாத்தில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.