ஜார்ஜியாவில் தொடங்கிய ‘விஜய் 65’ படப்பிடிப்பு! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
தளபதி விஜய் சைக்கிளில் வந்து, தன்னுடைய ஜனநாயக கடமையை செய்த கையேடு, மறுத்தினமே 'தளபதி 65 ' படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா பறந்தார். இந்நிலையில் இன்று ஷூட்டிங் பணிகள் துவங்கியதை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் அசத்தல் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் படத்திற்கு பின், தளபதி விஜய் 'கோலமாவு கோகிலா', மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஆகிய படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக, முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
சன்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடந்த பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் தளபதி 65 படத்தின் பூஜை படு விமர்சையாக நடைபெற்றது.
2 நாட்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நேற்று சைக்கிளில் வந்து மாஸ் காட்டிய விஜய், ஏப்ரல் 7 ஆம் தேதி ஜார்ஜியா பறந்துள்ளார்.
விஜய் விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வைரலாக பரவியது.
இதை தொடர்ந்து, ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் , ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட அது வைரலாகி வருகிறது.