- Home
- Cinema
- விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் குறித்து காத்துவாக்குல வந்த அப்டேட் - எப்போ ‘டும் டும் டும்’ தெரியுமா?
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் குறித்து காத்துவாக்குல வந்த அப்டேட் - எப்போ ‘டும் டும் டும்’ தெரியுமா?
Nayanthara Marriage : விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு கடந்தாண்டே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன் தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் இன்றளவும் எந்தவித சண்டை சச்சரவுகளும் இன்றி நீடித்து வருகிறது. நானும் ரவுடி தான் படத்துக்கு பின்னர் விக்கியும், நயனும் இணைந்து பணியாற்றியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ளதால், புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு கடந்தாண்டே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இவர்களது திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அவர்களின் திருமணம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜூன் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் இவர்களது திருமணம் கேரளா அல்லது வெளிநாட்டில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Koogle Kuttapa : பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் - லாஸ்லியா நடித்த ‘கூகுள் குட்டப்பா’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.