- Home
- Cinema
- வெளிநாட்டில் வெறித்தனமா ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்
வெளிநாட்டில் வெறித்தனமா ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வெளிநாட்டில் ஸ்லிம் லுக்கில் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர்களுள் அஜித்தும் ஒருவர். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து பட விழாக்கள், ஆடியோ லாஞ்ச், விருது விழாக்கள் என எதிலும் கலந்துகொள்ளாவிட்டாலும், இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. முன்பெல்லாம் அஜித்தின் புகைப்படங்கள் எப்போவாது வெளியாகும், ஆனால் சமீப காலமாக அவரின் புகைப்படங்கள் வெளியாகாத நாளே இல்லை என சொல்லும் அளவுக்கு தினசரி வெளிவந்த வண்ணம் உள்ளது.
Ajith
அந்த வகையில் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள நடிகர் அஜித்தின் கேஷுவல் லுக் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகின்றன. டவுசர் மற்றும் டீ சர்ட் அணிந்தபடி ரோட்டோரம் நின்றபடி போஸ் கொடுத்துள்ள நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா தளங்களை ஆக்கிரமித்து உள்ளன.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி பத்தாது... அதுக்கும் மேல கேட்ட கமல் - ஒரே அடியாக சம்பளத்தை வாரி வழங்கி அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்
Ajith
மேலும் அந்த புகைப்படங்களில் நடிகர் அஜித் ஸ்லிம்மாகவும் காட்சியளிக்கிறார். இதன்மூலம் அவர் விடாமுயற்சி படத்திற்காக வெளிநாட்டில் இருந்தபடியே வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து வருவது தெரிகிறது. நடிகர் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் தான் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அடுத்த மாத இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்க உள்ளாராம். விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய உலக பைக் சுற்றுலாவின் இரண்டாம் கட்டத்தை தொடங்க உள்ளார் அஜித். வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அவர் உலக சுற்றுலாவிற்கு சென்றுவிடுவார் என கூறப்படுகிறது. இதனால் அதற்குள் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டு உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... இனி நான் அமெரிக்கா Anchor.. ரசிகர்களுக்கு டாடா சொல்லிவிட்டு புறப்பட்ட மணிமேகலை!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.