- Home
- Cinema
- "சினிமாவை விட நாத்து நடுவது கஷ்டம்"விடுதலை கேப்பில் வெற்றி மாறன் என்ன செய்துள்ளார் தெரியுமா?
"சினிமாவை விட நாத்து நடுவது கஷ்டம்"விடுதலை கேப்பில் வெற்றி மாறன் என்ன செய்துள்ளார் தெரியுமா?
Farmer Vetrimaaran : விவசாயம் செய்து வரும் இயக்குனர் வெற்றி மாறன் தன்னுடைய அனுபங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில் "சினிமாவை விட நாத்து நடுவது கஷ்டம்" என கூறியுள்ளார்.

vetrimaaran
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மாதிரியான திரை படைப்புகளின் மூலம் அசாத்திய இயக்குனராக உருவெடுத்தவர் வெற்றிமாறன்.
vetrimaaran
வெற்றி மாறனின் இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
vetrimaaran
ராணிப்பேட்டையில் பள்ளி படிப்பை முடித்ததும் சென்னையில் உயர்கல்வி. லயோலாவில் பட்டப்படிப்பை முடித்தவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இணைந்தார்.
vetrimaaran
வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். எட்டு வருடங்கள் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றுக்கொண்டார் வெற்றிமாறன்.
vetrimaaran
வெற்றிமாறனின் நண்பர் ஒருவர் அவரது பைக்கை தொலைத்து விட அந்த அனுபவங்களை திரைக்கதையாக வைத்து ஒரு ஸ்க்ரிப்டை தயாரித்திருந்தார் வெற்றிமாறன். அது தான் பொல்லாதவன் படத்தின் கதை. 2007 தீபாவளி அன்று ரிலீசானது. அந்த படம் ஹிட் கொடுக்க மெல்லமாக கமர்ஷியல் பார்வையிலிருந்து கிளாசிக் படங்களின் பக்கமாக திரும்பினார் வெற்றிமாறன்.
vetrimaaran
ஆடுகளம், விசாரணை, அசுரன் என வெற்றிமாறன் இயக்கிய படங்கள் நாவலை தழுவி திரைக்கதையாக உருவாக்கப்பட்டவை. வசூல் ரீதியாகவும் அந்தப் படங்கள் சாதித்திருந்தன. அதே நேரத்தில் அந்த படைப்புகள் வெற்றிமாறனுக்கு தேசிய விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன. தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.
vetrimaaran
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் திரில்லர் மற்றும் அதிரடி திரைப்படம் விடுதலை. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
vetrimaaran
விடுதலை படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த கேப்பில் விவசாயம் குறித்த செய்தியை யூட்யூப் வழி அறிந்து நெல் பயிரிட்டு வருவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
vetrimaaran
சினிமாவில் இயக்குநராக ஜொலிக்கும் வெற்றிமாறன் ஷுட்டிங் இல்லாத சமயங்களில் விவசாயியாக அவதாரம் எடுத்து வருகிறார். இதற்காக வேடந்தாங்கல் அருகேயுள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி பசுமை பண்ணை அமைத்திருக்கிறார்.
vetrimaaran
ஷூட்டிங் இல்லாத சமயங்களில் சிட்டாய் வேடந்தாங்கல் பறக்கும் வெற்றிமாறன் அங்கு நடக்கும் விவசாய பணிகளை மேற்பார்வை செய்வதோடு, தானும் சில வேலைகளை ஆர்வமாக செய்து வருகிறார். நிஜ விவசாயியாக மாறிய இயக்குனர் வெற்றி மாறன் தன்னுடைய அனுபங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் "சினிமாவை விட நாத்து நடுவது கஷ்டம்" என கூறியுள்ளார்.