- Home
- Cinema
- பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா உடன்... விடுதலை டிரைலர் ரிலீஸுக்கு நாள் குறித்த வெற்றிமாறன்
பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா உடன்... விடுதலை டிரைலர் ரிலீஸுக்கு நாள் குறித்த வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அசுரன் படத்தின் வெற்றிக்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் 4 ஆண்டு இடைவெளிக்கு பின் ரிலீசாக உள்ள திரைப்படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இந்த இரண்டு பாகங்களின் ஷூட்டிங்களியும் எடுத்து முடித்துவிட்ட வெற்றிமாறன் தற்போது முதல் பாகத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.
அதன்படி விடுதலை படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் பாடிய ரொமாண்டிக் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி... அவருடனான மனஸ்தாபம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய ரஜினி
இந்நிலையில், விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளதால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அன்றைய தினமே படத்தின் டிரைலரையும் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலை படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. முதலில் ரூ.4 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்த வெற்றிமாறன், இறுதியாக 40 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துள்ளாராம். விடுதலை படத்தின் இரண்டு பாகங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தங்கலான் படத்துக்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கிய விக்ரம்... அதுவும் இத்தனை கோடியா..!