மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் ஷாக் கொடுத்த நடிகை வனிதா..! வைரலாகும் புகைப்படம்..!
பிக்பாஸ் வனிதாவிற்கு 4வது திருமணம், இந்த வருடத்திலேயே நடக்க வாய்ப்புள்ளதாகவும், அவரது ஜாதகத்தில் திருமண யோகம் உள்ளதாகவும் ஜோதிடர் ஒருவர் கணித்து கூறி இருந்த நிலையில், தற்போது திருமண கோலத்தில் பிரபல காமெடி நடிகருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் வனிதா. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், வாத்திக்குச்சியாக செயல்பட்டு பல சர்ச்சைகளை கொளுத்தி போட்டவர் வனிதா. இதை தொடர்ந்து அதே ஸ்பீடில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி, டைட்டில் வின்னராக மாறினார்.
நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், பூகம்பமாக வந்தது வனிதாவின் மூன்றாவது காதல். பல பிரச்சனைகளை கடந்து, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதே வேகத்தில் அவரிடம் இருந்து பிரிந்தார்.
மேலும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடன திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய நடனத்தை, மற்றொருவருடன் ஒப்பிட்டு பேசியதை தாங்க முடியாமல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறுவதாக கூறி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் முழு பகுதி, வரும் ஞாயிற்று கிழமை வெளியாக உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கைவசம் இல்லை என்றாலும், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் வனிதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பார்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக கல்யாண கோலத்தில் நிற்கிறார். ஏற்கனவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன், வனிதா பிரபல யூ டியூப் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது, அவரது ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்... வனிதாவின் ஜாதகத்தில் இன்னும் திருமண யோகம் உள்ளதாகவும் எனவே இந்த வருடம் அவர் வேறு நான்காவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறினார்.
குறிப்பாக வனிதா திருமணம் செய்து கொள்ளும் நபரின் பெயர் எஸ் என்ற எழுத்தில் துவங்கும் என்பதையும் கூறினார். ஏற்கனவே அவர் கொளுத்தி போட்ட இந்த விஷயம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் எண்ணெயை ஊற்றுவது போல் வனிதா இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த புகைப்படம், வனிதா பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.