ஜோதிகா போல் ஜொலிக்க வருகிறார் ஜோவிகா... வனிதா மகளுக்கு இவ்வளவு டிமாண்டா?
நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு 18 வயது ஆகியுள்ள நிலையில், அவரின் சினிமா எண்ட்ரி குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் வனிதா.
Vanitha Daughter Jovika
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த வனிதா, அடுத்து ராஜ்கிரண் உள்பட சில முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதையடுத்து திருமணம் ஆனதும் சினிமாவை விட்டு விலகிய வனிதா, தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
Jovika debut as heroine soon
இதுவரை மூன்று திருமணம் செய்த வனிதாவுக்கு, மூன்றுமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா, சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். நடிகை வனிதா இந்த அளவு பிசியானதற்கு காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார் வனிதா. அந்நிகழ்ச்சி தான் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நடிகை வனிதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜோவிகா அண்மையில் தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடினர். அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் கேட்ட கேள்வி, அவர் எப்போது ஹீரோயினாக அறிமுகமாகப்போகிறார் என்பது தான். ரசிகர்களின் இந்த கேள்விக்கு நடிகை வனிதா விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... வயசு தான் 45.. ஆனா கட்டுக்குலையாத பேரழகு - பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சூர்யாவின் ரீல் காதலி!
Jovika photos
அதன்படி தனது மகள் சினிமாவில் ஹீரோயினாவது உறுதி என தெரிவித்துள்ள வனிதா, இதற்காக ஜோவிகா மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேருக்கு சொந்தமான நடிப்பு பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியும் பெற்றுள்ளதாக கூறி இருக்கிறார். ஜோவிகா படித்த இந்த பயிற்சி பள்ளியில் தான், தற்போது பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா, வருண் தவான் ஆகியோர் பயின்றதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.
jovika cinema entry
நடிப்பு பயிற்சியை முடித்துள்ள தனது மகளுக்கு தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக கூறிய வனிதா, நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும், நல்ல கதை அமைந்தவுடன் விரைவில் தனது மகள் ஜோவிகா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாவார் என வனிதா கூறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜோதிகா போல் ஜோவிகாவும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றி... நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டதா?