22 வருடத்தில் எவ்வளவு மாற்றங்கள்..? ஆச்சர்ய படுத்தும் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார்!
பல சர்ச்சைகளை கடந்து, மீண்டும் திரையுலகிலும், சின்னத்திரையுலும் பிஸியாகியுள்ள வனிதா, 22 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இவரது பழைய புகைப்படத்தை பார்த்து மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு, தற்போது வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது, இவர் ஹீரோயினாக நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளதாக வனிதாவே சமூக வலைதள பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வாழ்க்கையை ஆரம்பித்த வனிதா அதேவேகத்தில் முடித்துக் கொண்டார். வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். அங்கு பீட்டர் பால் மூக்கு முட்ட குடித்ததால் பிரச்சனை செய்தார். அதன் பின்னர் சென்னை திரும்பிய பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கி ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து அடுத்த படமொன்றி இயக்க உள்ளார். அதில் கதாநாயகியாக நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
ஹரி நாடார் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படத்தில் வனிதா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். '2K அழகானது காதல்’ என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடித்து வரும், 'அந்தகன்' படத்திலும் வனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதே போல் சமீபத்தில் பிக்பாஸ் ஜோடி என துவங்கப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார். ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து போட்டியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் பிசியாக இருந்தாலும், யூடிப்பிலும் விதவிதமான சமயல் மற்றும் அழகு குறிப்புகளை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவர், 1999 ஆம் ஆண்டு எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும், வெளியிட்டு அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர், இளம் வயதில் வனிதா மிகவும் அழகாக இருப்பதாக தங்களது பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.