வணங்கான் சோலி முடிஞ்சது; அடுத்த படத்துக்கு ரெடியான பாலா! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
வணங்கான் படத்தை இயக்கி பொங்கலுக்கு ரிலீஸ் செய்த இயக்குனர் பாலா, அடுத்ததாக இயக்க உள்ள படத்திற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்க உள்ளாராம்.
Director Bala
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலா. அவர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விக்ரம் நாயகனாக நடித்த இப்படம் தமிழ் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இன்று பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வரும். அந்த அளவுக்கு அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக அதை இயக்கி இருந்தார் பாலா. சேது படத்தின் வெற்றி தான் நடிகர் விக்ரமுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Bala Movies
அதேபோல் பாலா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து நந்தா என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் தமிழ் சினிமாவின் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக திகழ்கிறது. அப்படம் நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து சூர்யா - விக்ரம் இருவரையும் வைத்து பிதாமகன் படத்தை இயக்கினார் பாலா. அப்படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் நான் கடவுள் படத்தின் மூலம் நடிகர் ஆர்யாவை டோட்டலாக மாற்றி, அவருக்குள் இருக்கும் நடிப்பு அரக்கனை வெளிக்கொண்டு வந்தார் பாலா.
இதையும் படியுங்கள்... Video Icon விஷாலின் உடல்நிலை இப்படி ஆக நான் காரணமா? இயக்குனர் பாலா சூடான பதில்
Vanangaan Bala
பின்னர் பரதேசி படத்தில் அதர்வாவை நடிக்க வைத்த பாலா, அவன் இவன் படத்துக்காக விஷாலை மாறு கண் உள்ளவராக நடிக்க வைத்தார். இப்படி பாலா இயக்கத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிடும். அந்த வகையில் அண்மையில் வணங்கான் படம் மூலம் நடிகர் அருண் விஜய்யை தன்னுடைய நடிப்பு பட்டறையில் பட்டை தீட்டி இருந்தார் பாலா. அப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்புக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் படம் வணிக ரீதியாக பெரியளவில் வெற்றிபெறவில்லை.
Bala next Movie salary
இப்படி படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி வரும் பாலா, அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்தை அமெரிக்காவில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவர் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்னும் இறுதியாகாவிட்டாலும், இப்படத்திற்காக பாலாவுக்கு பல்க் தொகை சம்பளமாக வழங்கப்பட்ட இருக்கிறதாம். அதன்படி தன் அடுத்த படத்திற்காக பாலாவுக்கு ரூ.8 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதுவரை அவர் இந்த அளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வணங்கான் பார்த்து அழுது அழுது தலைவலியே வந்துருச்சு – கண்கலங்கி பேசிய சங்கீதா!