பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைந்து விட்டதா?..வைரலான போட்டாவால் அதிர்ச்சியான ரசிகர்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைந்து விட்டதாக வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pandian stores
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப பண்பாட்டை போற்றும் கதையம்சத்துடன் ஒளிபரப்ப பட்டு வருகிறது.
Pandian Stores
சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருக்கும் இந்த நாடகத்தில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
pandian stores
சிறுவயதில் தந்தை தவறியதன் காரணமாக தலைமகன் பொறுப்புகளை ஏற்றுகொள்கிரார். அதோடு அவரது அம்மாவும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். பின்னர் தம்பிகளை வளர்ப்பதற்காக அண்ணன் திருமணம் செய்து கொள்ள தாய் ஸ்தானத்தில் இருந்து அண்ணி அந்த பிள்ளைகளை வளர்க்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...pandian stores hema dancing video : ''சும்மா சுர்ருனு'' ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா (ஹேமா)..
pandian stores
பாசமாக இருந்த இந்த குடுமபத்தில் மற்ற இரு சகோதரர்களுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதில் மூத்த தம்பி காதலித்த பெண்ணை திருமணம் முடிக்கிறார். இவரது மனைவி மீனாவை தவிர மற்ற இரு மருமகள்களும் உறவுக்கார பெண்கள்.
Pandian Stores
அதோடு மீனா பணக்கார வீட்டு பெண் என்பதால் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனைகளை தோற்றுவிக்கிறார். மீனாவாக நடித்து வரும் ஹேமாவிற்கு விஜய் டிவி சார்பாக வளைகாப்பு நடத்தப்பட்டது.
Pandian Stores
குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைய மூத்த அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் பல போராட்டங்களை மேற்கொள்கின்றனர். இந்த நாடகம் சராசரி கூட்டு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்முன் கொண்டு வருகிறது.
Pandian Stores
இல்லத்தரசிகளின் மனதை கொள்ளைகொணட பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னணி இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...அடடே..குடும்பத்தோட என்னம்மா ஆட்டம் போட்றாங்க..செம என்ஜாய் பண்ணும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள்..
pandian stores
ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தெலுங்கு வெர்சனான வதினம்மா தான் நிறைவடைந்துள்ளது. இதிலும் அண்ணியாக சுஜிதா தான் நடித்து வருகிறார்.