MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இசையில் மேஜிக் செய்த இளையராஜா: இரண்டே வரியில் ராமாயணத்தை சொன்ன வாலியின் பாடல்!

இசையில் மேஜிக் செய்த இளையராஜா: இரண்டே வரியில் ராமாயணத்தை சொன்ன வாலியின் பாடல்!

Vaali Explained Ramayana in Two Lines : கவிஞர் வாலி தான் எழுதிய பாடலில், ராமாயணத்தையே இரண்டே வரிகளில் கூறி மெய் சிலிர்க்க வைத்த பாடல் பற்றி தெரியுமா?

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 16 2026, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகா கவிஞர் வாலி
Image Credit : Asianet News

மகா கவிஞர் வாலி

தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாடல் எழுதி சாதனை படைத்தவர் கவிஞர் வாலி. 1963ஆம் ஆண்டு தொடங்கிய அவரது எழுத்துப் பயணம் 2013ஆம் ஆண்டு வரை நீடித்து, 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை பல தலைமுறை முன்னணி நடிகர்களுக்காக பாடல் எழுதியுள்ளார். அவரது வரிகளில் உருவான பல பாடல்கள் இன்றும் மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளன.

24
வாலி குறிப்பிடும் மனிதர்கள்
Image Credit : Asianet News

வாலி குறிப்பிடும் மனிதர்கள்

வாலி பெரிய கவிஞராக உருவாக முக்கிய காரணம் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என அவர் எப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார். “இன்று நான் கவிஞனாக இருக்க காரணம் அவர் தான்” என்று பல மேடைகளில் பெருமையாக கூறியுள்ளார். அதேபோல் நடிகர்களில் கமல்ஹாசனின் திறமையை அவர் அதிகம் பாராட்டியுள்ளார்.

34
மயக்கும் வரிகள்
Image Credit : Facebook

மயக்கும் வரிகள்

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய வாலி, சம்பள விஷயத்தில் மிகவும் உறுதியானவர் என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் பாக்யராஜுடன் பணிபுரியும் போது கூட இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளன. இவரின் மயக்கும் வரிகளுக்காக வரிசை கட்டி நின்ற இயக்குனர்களும் உண்டு. அதில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் அடக்கம்.

44
இரண்டே வரியில் ராமாயணம்
Image Credit : Facebook

இரண்டே வரியில் ராமாயணம்

சரி வாலி இரண்டே வரியில் ராமாயண கதையை கூறிய பாடல் பற்றி உங்களுக்கு தெரியுமா?. ஆம் 1991ஆம் ஆண்டு வெளியான “கோபுர வாசலிலே” திரைப்படத்தில், வாலி மற்றும் பிறைசூடன் இணைந்து பாடல்கள் எழுதியுள்ளனர். “தேவதை போல் ஒரு பெண்” என்ற பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது. இந்த பாடலில் ராமாயணத்தை சுருக்கமாக இரண்டு வரிகளில் கூறிய வாலியின் திறமை குறிப்பிடத்தக்கது. இந்த பாடலும் சூப்பர் ஹிட் வெற்றி பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
கமல்ஹாசன்
சிவகார்த்திகேயன்
இளையராஜா
எம்.ஜி.ஆர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asha Bhosle Net Worth: ரூ.250 கோடி சொத்து, வெளிநாட்டு பிசினஸ்..! ஆஷா போஸ்லேவின் வாரிசு யார்?
Recommended image2
Now Playing
விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
Recommended image3
விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஜூலி மீது வழக்கு பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved