'சார்பட்டா' படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டிய உலக நாயகன்!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சார்பட்டா படக்குழுவினரை இன்று சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம், கடந்த மாதம் 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களும், இயக்குனர் பா.ரஞ்சித்தின் கதாபாத்திர தேர்வு மற்றும் படத்தை ரசித்து கொண்டு சென்ற விதத்தை பாராட்டி வருகிறார்கள். பட குழுவினர் அனைவருக்கும் தினம் தோறும் பாராட்டு மழை குவிந்து வருகிறது.
குறிப்பாக இந்த படத்தை அச்சு அசல் 1970 களில் காலகட்டத்தில் இருந்த வட சென்னை போன்றே தத்ரூபமாக செட் அமைத்த கலை இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் 'சார்பட்டா' படத்தை பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதில் இயக்குனர் பா.ரஞ்சித், ஆர்யா, ஜான் கோகென், உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரின் நடிப்பையும் குறிப்பிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.