MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆபரேஷன் சிந்தூர் : இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்த தளபதி விஜய்

ஆபரேஷன் சிந்தூர் : இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்த தளபதி விஜய்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து இந்திய ராணுவத்திற்கு ஒரு ராயல் சல்யூட் அடித்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான தளபதி விஜய்.

1 Min read
Author : Ganesh A
Published : May 07 2025, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Praises Operation Sindoor

Vijay Praises Operation Sindoor

மே 7 ஆம் தேதி அதிகாலை, இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி இந்திய சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

24
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்

பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை நாடே கொண்டாடுகிறது. பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லியமாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த மின்னல் வேகத் தாக்குதலால் பயங்கரவாதிகள் நிலைகுலைந்துள்ளனர். பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

Related Articles

Related image1
ஆபரேஷன் சிந்தூர் டிரெய்லர் மட்டும் தான்; இன்னும் மெயின் பிக்சர் பாக்கி இருக்கு - நரவனேவின் பதிவு வைரல்
Related image2
ஃபைட்டரின் வேட்டை ஆரம்பம்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து ரஜினி போட்ட மாஸ் பதிவு
34
சக்சஸ் ஆன ஆபரேஷன் சிந்தூர்

சக்சஸ் ஆன ஆபரேஷன் சிந்தூர்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது மின்னல் வேகத் தாக்குதல் நடத்தி அழித்தன. இதனால் நாடே இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது. குறிப்பாக திரைப்பிரபலங்களும் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

44
தளபதி விஜய் பாராட்டு

தளபதி விஜய் பாராட்டு

அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் இந்த பதிவுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. விஜய் தவிர நடிகர் ரஜினிகாந்தும் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆபரேஷன் சிந்தூர்
இந்தியா-பாகிஸ்தான் போர்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அமலா பால் வாழ்க்கையை திருப்பிப்போட்ட கோவா ட்ரிப்... ஜோதிடரால் நடந்த மேஜிக்..!
Recommended image2
கர்ப்பமான தங்கமயில்... சரவணனுக்கு காத்திருக்கும் பேரிடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அதிரடி திருப்பம்
Recommended image3
ஹிட் சுனாமி ராஷ்மிகா! டாப் 10 படங்களில் 5 படம் ரூ.250 கோடி வசூல் சாதனை.!
Related Stories
Recommended image1
ஆபரேஷன் சிந்தூர் டிரெய்லர் மட்டும் தான்; இன்னும் மெயின் பிக்சர் பாக்கி இருக்கு - நரவனேவின் பதிவு வைரல்
Recommended image2
ஃபைட்டரின் வேட்டை ஆரம்பம்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து ரஜினி போட்ட மாஸ் பதிவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved