இதயத்தை வருடக் கூடிய காலத்தால் அழியாத டாப் 5 பெஸ்ட் சாங்ஸ்!
Top 5 Tamil Songs That Touch the Heart Deeply : வாழ்க்கையும், சினிமாவும் ஒன்றிவிட்ட ஒன்றாகிவிட்டது. இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப வாழ்க்கையில் கேட்க வேண்டிய பாடங்கள் நம்மை சந்தோஷப்படுத்தும் விதமாகவும், ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளன.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
இதயத்தை வருடக் கூடிய காலத்தால் அழியாத டாப் 5 பெஸ்ட் சாங்ஸ்!
Top 5 Tamil Songs That Touch the Heart Deeply : தமிழ் சினிமா காலத்தால் அழிக்க முடியாத் எண்ணற்ற பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அது திறமை வாய்ந்த இசையமைப்பாளர்களையும், குரல்களையும் உருவாக்கியிருக்கிறது. அப்படி திறமை வாய்ந்தவர்களின் குரல்கள் எப்போதும் போற்றப்படும் என்றென்றும் பிரபலமாக உள்ளன. கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான தமிழ் படங்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் காதுகளுக்கு விருந்தளிக்கும் பாடல்களாக உள்ளன. அந்த காலகட்டங்கள் எல்லாம் கே வி மகாதேவன் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த காலங்கள். அதன் பின்னர் தான் இளையராஜா வந்தார். இப்படி ஏராளமானோர் ஆட்சி செய்த தமிழ் சினிமாவில் வந்த காலத்தால் அழியாத பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெய் நிகரா
சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தில் இடம் பெற்ற பாடல் தான் மெய் நிகரா. இந்தப் பாடலானது ஆத்மார்த்தமான, ஈடு செய்ய முடியாத ஏக்கத்தையும் இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. மெய் நிகரா மெல்லிடையா போய் நிகரா பூங்கொடியா என்பது அந்த பாடல். இந்த பாடலுக்கு என்ன அர்த்தம் என்றால் நீ என்னுடைய இறுதி உண்மையா என்பது தான் அந்த பாடலின் பொருள். சித் ஸ்ரீராம் இந்தப் பாடலை தனது குரலில் பாடியிருக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
நான் வருவேன்
விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் தான் ராவணன். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தான் நான் வருவேனே. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிக்கலான கதையின் ஆழத்தை இந்தப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. அதாவது ஏக்கம், ஆழமான உணர்ச்சி மற்றும் வாக்குறுதி ஆகியவற்றை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது.வைரமுத்து இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுக்க, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஜாலி ஃபிலி சிசோகா ஆகியோர் பாடலை பாடியுள்ளனர்.
ஆராரோ
இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் 24. இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தான் ஆராரோ. இது உணர்வுப்பூரமான தாலாட்டு பாடலை அடிப்படையாக கொண்டது. இது குழந்தைகளை தூங்க வைக்க பயன்படுத்தும் ஒருதாலாட்டு பாடல் ஆகும்.
மேற்கு கரையில்
அருவி படத்தில் இடம் பெற்ற பாடல் தான் அருவி. அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் ஆகியோ இந்த்ப் பட்த்தில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் படத்தில் வரும் பாடல் தான் மேற்குக் கரையில். இந்த படத்திற்கு பிந்துமாலினி மற்றும் வேதாந்த் பர்த்வாஜ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
உன்னை கேளாய்
டிஎல் மகாராஜன் மற்றும் ஹரிஹரன் பாடிய பாடல் தான் இது. இந்தப்பாடலானது ஆழமான தத்துவ பாடலை அடிப்படையாக கொண்டது. சந்தேகம், முடிவெடுப்பது, அர்த்தத்திற்கான தேடல் போன்ற உலகளாவிய மனித அனுபவங்களை பிரதிபலிப்பதால் இந்தப் பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.