MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூல் மன்னனாக கோலிவுட்டில் முத்திரை பதித்த சிவகார்த்திகேயன் – எஸ்கேயின் அதிக வசூல் குவித்த டாப் 5 தமிழ் மூவிஸ்

வசூல் மன்னனாக கோலிவுட்டில் முத்திரை பதித்த சிவகார்த்திகேயன் – எஸ்கேயின் அதிக வசூல் குவித்த டாப் 5 தமிழ் மூவிஸ்

Top 5 Highest Grossing Movies of Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களில் ஒரு சில படங்களே அதிக வசூல் குவித்து சாதனை படைத்துள்ளன. அதில், அமரன் மட்டுமே ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

3 Min read
Author : Rsiva kumar
| Updated : Nov 15 2024, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Sivakarthikeyan Top 5 Highest Grossing Movies, Top 5 Highest Grossing Movies of Sivakarthikeyan

Sivakarthikeyan Top 5 Highest Grossing Movies, Top 5 Highest Grossing Movies of Sivakarthikeyan

சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்குள் கால் பதித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஓவியா இருவரும் முன்னணி ரோலில் நடித்து வெளியான காமெடி டிராமா படம் மெரினா. 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.80 லட்சம். ஆனால், வசூல் குவித்தது வெறும் ரூ.30 லட்சம் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Sivakarthikeyan Top 5 Highest Grossing Movies

Sivakarthikeyan Top 5 Highest Grossing Movies

அதன் பிறகு தனுஷ் உடன் இணைந்து 3 படத்தில் நடித்திருந்தார். இதே போன்று மனம் கொத்தி பறவை படத்தில் நடித்திருந்தார். இந்த படங்கள் கொடுத்த அமோக வரவேற்பு அவரை எதிர் நீச்சல் படத்தில் நடிக்க வைத்தது. தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி இந்தப் படம் அவருக்கு பேரும், புகழும் பெற்று கொடுத்தது. மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன், அயலான், கோட் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

38
Sivakarthikeyan Top 5 Highest Grossing Movies

Sivakarthikeyan Top 5 Highest Grossing Movies

சமீபத்தில் அமரன் படத்தில் நடித்து வெளியிட்டு ஹிட் கொடுத்திருக்கிறார். தற்போது தனது 23ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதுவரையில் 21 படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு எந்தப் படமும் ரூ.120 கோடி தாண்டி வசூல் குவிக்கவில்லை. ஆனால், அமரன் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து கோல்வுட்டில் சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக அங்கீகரித்துள்ளது.

இதன் மூலமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரது வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக வசூல் குவித்த டாப் 5 படங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க. இந்தப் பட்டியலில் முதலாவதாக இருப்பது அமரன் படம் தான்.

48
Amaran Box Office Collection, Top 5 Highest Grossing Movies of Sivakarthikeyan

Amaran Box Office Collection, Top 5 Highest Grossing Movies of Sivakarthikeyan

அமரன்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் அமரன். பிக்பாஸ் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இராணுவ வீரர்களின் உணர்வை அவர்கள் படும் கஷ்டத்தை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருப்பார் இயக்குநர். சிவகார்த்திகேயனையும் சும்மா சொல்லக் கூடாது. அப்படியே இராணு வீரர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார். ரூ.110 கோடி எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகி 14 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.262.1 கோடி வசூல் குவித்துள்ளது. இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ரூ.300 கோடி வசூல் குவிக்கும் படங்களின் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

58
DON Box Office Collection

DON Box Office Collection

டான்:

அதிக வசூல் குவித்த சிவகார்த்திகேயனின் படங்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருப்பது டான். ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.122 கோடி வசூல் குவித்துள்ளது. கல்லூரி முதல் திருமணம் வரையிலான இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

68
Doctor Box Office Collection

Doctor Box Office Collection

டாக்டர்:

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரது நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் காமெடி படம் டாக்டர். ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.102 கோடி வசூல் குவித்தது.

78
Velaikkaran Box Office Collection

Velaikkaran Box Office Collection

வேலைக்காரன்:

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத் பாசில் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் வேலைக்காரன். குடிசையில் வாழும் ஒரு இளைஞன், தனக்கு வேலை கொடுத்த நிறுவனம் உணவு கலப்படம் செய்வதற்கு எதிராக போராடும் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.87 கோடி வரையில் வசூல் குவித்தது.

88
Ayalan Box Office Collection

Ayalan Box Office Collection

அயலான்:

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் அயலான். தொலைந்து போன வேற்றுகிரகவாசி தனது வீட்டிற்கு திரும்ப உதவியை நாடுகிறார். அப்போது நடக்கும் சம்பங்கள் தான் அயலான். ரூ.45 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.81.4 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image2
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Recommended image3
Theatre and OTT Releases : ஓம் முதல் ஆபிஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved