MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • JioHotstar-ல் உள்ள டாப் 3 டக்கரான தமிழ் த்ரில்லர் மூவீஸ்... ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்கும்..!

JioHotstar-ல் உள்ள டாப் 3 டக்கரான தமிழ் த்ரில்லர் மூவீஸ்... ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்கும்..!

முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஜியோ ஹாட்ஸ்டாரில் எக்கச்சக்க படங்கள் நிரம்பி இருக்கின்றன. அதில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 3 தமிழ் த்ரில்லர் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 09 2026, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamil Thriller Movies on JioHotstar
Image Credit : X

Tamil Thriller Movies on JioHotstar

த்ரில்லர் படங்களுக்கு எப்பவுமே மவுசு உண்டு. அடுத்த என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்போடு ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் த்ரில்லர் படங்கள் ஏராளம் உண்டு. தமிழிலும் சில அண்டர்ரேட்டடான த்ரில்லர் படங்கள் இருக்கின்றன. அதில் மூன்று த்ரில்லர் படங்களைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். இந்த மூன்று படங்களுமே ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன. இதை முதன்முறையாக பார்ப்பவர்கள், இப்படி ஒரு படத்தை இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டோமே என ஃபீல் பண்ணுவீங்க. அந்த அளவுக்கு தரமான படமாக இருக்கும்.

24
ரங்கூன்
Image Credit : X

ரங்கூன்

தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ரங்கூன். கடத்தலை சுற்றி நடக்கக்கூடிய காதல், நட்பு, துரோகம் ஆகியவற்றை மையப்படுத்தி தான் இந்தப் படம் இருக்கும். கெளதம் கார்த்திக்கின் கெரியரில் ஒரு தரமான அண்டர்ரேட்டட் படம் இது. இப்படத்தின் இயக்குநர் வேறுயாருமில்லை... சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி தான். அவர் இயக்கிய முதல் படம் இதுவாகும். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

Related Articles

Related image1
The Raja Saab OTT Release: விமர்சனங்களை மீறி ரசிகர்களை ஈர்க்கும் ‘தி ராஜா சாப்’ ! பிரபாஸ் படம் மீண்டும் பேசப்படுவதேன்?
Related image2
OTT This Week: தியேட்டருக்கு போக முடியலையா? கவலை விடுங்க! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மாஸ் படங்கள்!
34
ராஜ தந்திரம்
Image Credit : X

ராஜ தந்திரம்

தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய ஒரு த்ரில்லர் படங்களில் ராஜ தந்திரம் திரைப்படமும் ஒன்று. மூன்று நண்பர்களின் வாழ்க்கைக்குள் நடக்கக் கூடிய விஷயங்கள் தான் இந்த படத்தின் ஒன்லைன். ஒரு இடத்தில் கொள்ளையடிக்கப் போவதை அதற்கு முன்பே அந்த இடத்தின் ஓனருக்கே போன் போட்டு நான் இப்படி தான் கொள்ளையடிக்கப் போறேன் முடிஞ்சா தடுத்துக்கோ என சொல்லிவிட்டு, ஹீரோ திட்டமிட்டபடி கொள்ளையடித்துவிட்டு வருவார். இதைமட்டும் மனதில் வைத்து போய் ஜியோ ஹாட்ஸ்டாரில் அந்த படத்தை பாருங்கள் செம விறுவிறுப்பா இருக்கும்.

44
குற்றமே தண்டனை
Image Credit : X

குற்றமே தண்டனை

காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் குற்றமே தண்டனை. கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சிட்டு வர்ற ஹீரோ தங்கியிருக்கும் ஏரியாவில் அவரின் வீட்டின் கீழே தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கியிருப்பார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுவார். அவருடைய கொலையை சுற்றி நடக்கக்கூடிய சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. தவறு செய்யக்கூடாது என்பதை உணர்த்தவே இந்த படத்தை எடுத்திருக்கிறார் மணிகண்டன். இப்படமும் ஜியோஹாட்ஸ்டாரில் மிஸ் பண்ணக்கூடாத படங்களில் ஒன்றாகும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சவால் விட்ட பாலசந்தர்.! மேடையில் வைத்து கண்ணதாசன் செய்த சம்பவம்.! சூப்பர் ஹிட் பாடல் உருவான கதை.!
Recommended image2
சீரியல் நடிகைகளுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்... யாருக்கு அதிகம்? யாருக்கு கம்மி தெரியுமா?
Recommended image3
Ilayaraja: என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் இவங்க பாடியதா? இளையராஜா வாய்ப்பு கொடுத்த 10 அரிதான குரல்கள்.!
Related Stories
Recommended image1
The Raja Saab OTT Release: விமர்சனங்களை மீறி ரசிகர்களை ஈர்க்கும் ‘தி ராஜா சாப்’ ! பிரபாஸ் படம் மீண்டும் பேசப்படுவதேன்?
Recommended image2
OTT This Week: தியேட்டருக்கு போக முடியலையா? கவலை விடுங்க! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மாஸ் படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved