விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா பாட்டுக்கு போட்டியாக கேஜிஎப் 2 படக்குழு வெளியிட்ட அப்டேட்
பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்குளாக ஜாலியோ ஜிம்கானாவுக்கு போட்டியாக கே.ஜி.எஃப் படத்திலிருந்து வெளியாகும் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

KGF 2
யாஷின் ‘கேஜிஎஃப் 2’ :
‘கேஜிஎஃப்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
KGF 2
தெறி கிளப்பிய ‘கேஜிஎஃப் 2’ டீசர் :
‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் சாதனைகளையும் செய்தது. நாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப்2 திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகி இருந்தது.100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்தது.
KGF 2
துப்பாக்கியுடன் மாஸ் லுக்கில் யாஷ் :
இந்த டீசரில் நாயகன் பெரிய துப்பாக்கியுடன் காணப்படுவர். மாஸ் என்ட்ரியில் போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் நிற்கும் யாஷ். அங்குள்ள வாகனத்தின் மீது சரமாரியாக குண்டுகளை சிதறவிடுவார். பின்னர் அந்தத் துப்பாக்கியின் சூட்டில் சிகரெட்டைப் பற்றவைத்து தெறி கிளப்பி இருந்தார்.
KGF 2
புகாருக்குள்ளான சிகிரேட் காட்சி :
துப்பாக்கி முனையில் சிகரெட்டைப் பற்ற வைத்த விவகாரம் கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அதோடு இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இந்த காட்சிகள் புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5ஆவது பிரிவை மீறிய செயல் என புகார் எழுந்தது.
KGF 2
புத்தாண்டில் வெளியாகும் ‘கேஜிஎஃப் 2’ :
KGF 2 திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
KGF 2
ட்ரைலர் தேதியை அடுத்து சிங்கிள் ரிலீஸ் டேட் :
போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிந்துள்ள 'கே.ஜி.எஃப். 2' படத்தின் டிரைலர் வரும் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிங்குளுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
beast
ஜாலியோ ஜிம்கானா உடன் போட்டியிடும் டூஃபான் :
அரபிக் குத்து பாடலை தொடர்ந்து தற்போது ’ஜாலியோ ஜிம்கானா' எனத் தொடங்கும் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யே பாடியுள்ள இந்த பாடல் மார்ச் 19-ல் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
KGF 2
ஜாலியோ ஜிம்கானா VS டூஃபான் :
இந்நிலையில் கே.ஜி.எஃப் படத்திலிருந்து வெளியாகும் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது டூஃபான் பாடல் வீடியோ வரும் மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்குளாக ஜாலியோ ஜிம்கானாவுக்கு போட்டியாக வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.