MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் - எது தெரியுமா?

9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் - எது தெரியுமா?

பிரபுதேவா இயக்கத்தில் திரிஷா நடித்த படமொன்று தமிழ் உள்பட 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அதில் 8 மொழிகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 22 2025, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

Trisha Movie Remade in 9 languages : திரைப்படங்கள் ஒரு மொழியில் ஹிட்டானால், அதை பிற மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். ரீமேக் படங்கள் மூலம் நட்சத்திரங்களாக மாறிய ஹீரோக்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான ஒரு படம் ஒன்பது முறை ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தை பிரபுதேவா தான் இயக்கி இருந்தார். தெலுங்கில் உருவான அப்படம் பின்னாளில் தமிழ், கன்னடம், இந்தி, ஒடியா, பஞ்சாபி, வங்காள மொழி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

27
Nuvvostanante Nenoddantana

Nuvvostanante Nenoddantana

பிரபுதேவா இயக்கிய படத்துக்கு இவ்வளவு மவுசா?

அந்த படத்தின் பெயர் `நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா`. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, நடிகர் பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இதுதவிர இப்படத்தின் இயக்குனர் பிரபு தேவாவும் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றினார். இப்படத்தை கடந்த 1989-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் இந்தியில் வெளியான ‘மைனே பியார் கியா' என்கிற பாலிவுட் படத்தை தழுவி எடுத்திருந்தார் பிரபுதேவா.

37
Unakkum Enakkum

Unakkum Enakkum

தமிழ் ரீமேக்கில் நடித்த ஜெயம் ரவி

2005-ம் ஆண்டு வெளியாகி நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா திரைப்படம் ஹிட்டானதை அடுத்து 2006 ஆம் ஆண்டில் அப்படத்தை கன்னடத்தில் ‘நீனெல்லோ நானல்லே’ என்றும் தமிழில் உனக்கும் எனக்கும் என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டன. கன்னடப் படத்தை தினேஷ் லால் இயக்கினார்ர், அதே நேரத்தில் தமிழில் இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார். இதில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், திரிஷா ஹீரோயினாகவும் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே 2006-ம் ஆண்டு ஜூலை 28ந் தேதி ரிலீஸ் ஆகி ஹிட்டாகின.

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி ரிலீஸுக்கு பின் திரிஷா போட்ட காட்டமான பதிவு; அவரை யார் என்ன சொன்னார்கள்?

இதையும் படியுங்கள்... 

47
Nuvvostanante Nenoddantana Remake

Nuvvostanante Nenoddantana Remake

பெங்காலி மற்றும் மணிப்பூரியில் ஹிட்டான படம்

பின்னர் 2007-ம் ஆண்டு இந்த படம் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அதன்படி பெங்காலி மொழியில் 'ஐ லவ் யூ' என்கிற பெயரிலும், மணிப்பூரி மொழியில் ‘நிங்கோல் தஜாபா’ என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டன. இந்த இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்ததாக கூறப்படுகிறது.

57
Nuvvostanante Nenoddantana Remake in Punjabi

Nuvvostanante Nenoddantana Remake in Punjabi

ஒடியா, பஞ்சாபியிலும் மாபெரும் வெற்றி

2009 ஆம் ஆண்டு, ஒடியாவில் ‘சுனா சாலி மோ ருபா சாலி’ என்ற தலைப்பிலும், பஞ்சாபியில் `தேரா மேரா கி ரிஷ்தா' என்ற தலைப்பிலும் `நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா` திரைப்படம் ரீமேக் செய்து வெளியிடப்பட்டன. இவை இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றன.

67
Nuvvostanante Nenoddantana Remake in Bangladesh

Nuvvostanante Nenoddantana Remake in Bangladesh

சர்வதேச அளவில் ரீமேக் செய்யப்பட்ட படம்

2010 ஆம் ஆண்டில், வங்காளதேசத்தில் ‘நிசாஷ் அமர் துமி’ என்கிற பெயரிலும், நேபாளத்தில் ‘தி ஃப்ளாஷ் பேக்: ஃபர்கேரா ஹெர்டா’ என்ற தலைப்பிலும் ரீமேக் செய்து வெளியிடப்பட்டன. இவையும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தன.

77
Nuvvostanante Nenoddantana Remake in Hindi

Nuvvostanante Nenoddantana Remake in Hindi

இந்தியில் படுதோல்வி

பின்னர் இறுதியாக 2013-ம் ஆண்டு `ராமையா வஸ்தவய்யா' என்ற பெயரில் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார். இதில் கிரிஷ் குமாரும், ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர். இருப்பினும், இப்படம்பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

இதையும் படியுங்கள்... இது என்ன த்ரிஷாவுக்கு வந்த சோதனை? பிரியா வாரியர் கிட்ட இருக்கு ஆனால் உங்ககிட்ட இல்லையா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா
தமிழ் நடிகைகள்
டோலிவுட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!
Recommended image2
ஆனந்தியின் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்! அன்புவுடன் சேரப்போவது எப்போது? சிங்கப்பெண்ணே சீரியலில் அதிரடி திருப்பம்!
Recommended image3
பழைய பகையை மறந்த விஜி? விக்ரமிற்காக இறங்கி வந்த பாக்கியலட்சுமி! செல்லமே செல்லமே சீரியலில் அரங்கேறும் பாசப் போராட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved