நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் ... வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதிக்க கோரி போட்டப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

nadigar sangam
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் :
தென்னிந்திய கலைஞர்களுக்கான சங்கம் ( SIAA ) சென்னையில் உள்ளது. இதில் திரைப்படம் , தொலைக்காட்சி மற்றும் மேடை நடிகர்களுக்காள் உறுப்பினர்களாக உள்ளனர்.
nadigar sangam
மூன்று முறை தலைவரான சரத்குமார் :
முன்னதாக இந்த சங்கத்தில் தலைவராக இருந்த விஜயகாந்த் பதவி விலகியதை அடுத்து சரத்குமார் மூன்று முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
nadigar sangam
சங்க கணக்கில் முறைகேடு :
மூன்று ஆண்டுகள் தலைவராக பதவியில் இருந்த சரத்குமார் தலைமையிலான நிர்வாகத்தில் முறையான கணக்குகள் காட்டப்படுவதில்லை என்கிற குற்றசாட்டை முன் வைத்து கிளர்ந்தெழுந்தார் விஷால்.
nadigar sangam
அடுத்த தேர்தலில் விஷால் அணி :
குற்றச்சாட்டோடு நிறுத்தாமல் தேர்தலில் சரத்குமாருக்கு எதிராக களமிறங்கிய இளைஞர் அணியில் விஷால் செயலாளராகவும் ,நாசர் தலைவியாராகவும், கார்த்தி பொருளாளராகவும், கருணாஸ், பொன்வண்ணன் துணை தலைவர்களாகவும் போட்டியிட்டனர்.
தொடர்புடைய செய்திகளுக்கு ...அப்பாடி...நடிகர் சங்க தேர்தல்.. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை
nadigar sangam
அடிதடியாக நடந்து முடிந்த தேர்தல் :
அரசியல் தேர்தல் போல கலக்கட்டியிருந்தது நடிகர் சங்க தேர்தல். பிரமாண்டமாக நடைபெற்ற போதிலும் இருதரப்புக்கு இடையே எக்கச்சக்க சர்ச்சைகள் அரங்கேறின. விஷால் தேர்தலின் போது தாக்கப்பட்டார்.
nadigar sangam
வெற்றி வாகை சூடிய விஷால் டீம் :
முன்னணி மீடியாக்கள் நேரடி ஒளிபரப்பு ப்பான தேர்தலில் நேரடி மற்றும் தபால் முறை ஓட்டு நடைபெற்றது. துணை நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை ஒரே இடத்தில் பிரபலங்கள் கூடியிருந்ததால் தேர்தல் களமே திருவிழா கோலம் பூண்டது.
nadigar sangam
நடிகர் சங்க கட்டிடம் :
தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அணி நடிகர் சங்கத்திற்கென தனி கட்டிடம் கட்டபப்டும் என அறிவித்தனர். அதற்காக பிரபலங்களிடம் நிதி திரட்டப்பட்டு கட்டிடம் காட்டும் பணி நடைபெற்றது. இன்னும் கட்டிடம் முழுமையடையவில்லை.
தொடர்புடைய செய்திகளுக்கு ...சட்டை கிழிந்து... ரத்த காயங்களுடன் விஷால்..வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..
nadigar sangam
தேர்தல் முடிவுக்கு தடை விதித்த நீதிமன்றம் :
இரண்டாவது முறையாக கடந்த 2019-ம் ஆண்டும் மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி, மற்றும் பாக்கியராஜ் தலைமையிலான மற்றோரு அணி போட்டியிட்டது. தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதித்த நீதிமன்றம் நடிகர் சங்க அலுவல்களை கவனிக்க தனி அதிகாரியை நியமித்தது.
nadigar sangam
வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதியும் - வழக்கு தள்ளுபடியும் :
இந்நிலையில் வரும் வரும் 20-ம் தேதி நடிகர் சங்க தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.