முதல்வன் வாய்ப்பை மறுத்த ரஜினிகாந்த்..காரணம் சொன்ன பிரபலம்!
அரசியல் சூழ்நிலை காரணமாக முதல்வன் படத்தில் நடிக்க உடையது என்று ரஜினிகாந்த் ஷங்கரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

mudhalvan
இன்றைய முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த முதல்வன் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியானது. அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமானா இப்படத்தில் அர்ஜுன் , மனிஷா கொய்ராலா மற்றும் ரகுவரன், வடிவேலு மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு மற்றும் சுஜாதாவின் வசனங்கள் இடம்பெற்றன.
mudhalvan
தீபாவளி வெளியீடாக வந்த இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனப் பாராட்டைப் பெற்றது. இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மற்றும் பல விருதுகளை வென்றது. இந்தப் படம் பின்னர் இந்தியில் நாயக்என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் பாடல்கள் ,வசனங்கள் அனைத்த்து செம மாஸ் ஹிட் கொடுத்திருந்தன.
director shankar
இந்நிலையில் அர்ஜுன் நாயகனாக நடித்த இந்த படத்தில் முதலில் ரஜினி தான் ஒப்பந்தமானதாகா கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன், இயக்குநர் ஷங்கர் முதல்வன் படகதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் எழுதினாராம். அந்த கதையை ரஜினிகாந்திடம் அப்போது கூறியபோது ரஜினிகாந்துக்கும் கதை பிடித்துப்போய் விட்டதாக கூறியுள்ளார்.
rajinikath
ஆனால் முதல்வன் படம் வந்த சமயத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது. ஆகையால் இந்த சூழலில் முதல்வன் படத்தில் நடிப்பது சரிப்படாது என ரஜினி கூறிவிட்டாராம். இதையடுத்தே ரஜினிக்கு பதில் அர்ஜுனை வைத்து இயக்கியுள்ளார் ஷங்கர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.