- Home
- Cinema
- Shakuntalam first look : வாவ்...சாகுந்தலாவாக மாறிய சமந்தா...புராண கதைப்பக்கம் நகரும் நாயகிகள்..
Shakuntalam first look : வாவ்...சாகுந்தலாவாக மாறிய சமந்தா...புராண கதைப்பக்கம் நகரும் நாயகிகள்..
Shakuntalam first look : நடிகை சமந்தா அழகின் உருவமாய் வண்ணப்பறவைகளுடன் அமர்ந்திருக்கும் சகுந்தலாவின் முதல்பார்வை போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது..

samantha
நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
samantha
திருமண வாழ்க்கையில் சமந்தா தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார்.
samantha
தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Samantha
தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்
samantha
இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
samantha
நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள வெப் தொடர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘பேமிலிமேன் 2’ வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்ததாக இயக்கும் வெப் தொடரில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
samantha
தற்போது நடிகை சமந்தா மகாகவி காளிதாஸ் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையில் நடித்து வருகிறார். இந்த கதையின் நாயகியான சகுந்தலா கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா உடன் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் குணசேகரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
samantha
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
samantha
இந்த போஸ்டரில் நடிகை சமந்தாவின் தோற்றம் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.