- Home
- Cinema
- Bigg Boss thamarai open talk : அவங்க தான் சண்டை போட சொல்றாங்க' பிக் பாஸை போட்டுக்கொடுத்த தாமரை..
Bigg Boss thamarai open talk : அவங்க தான் சண்டை போட சொல்றாங்க' பிக் பாஸை போட்டுக்கொடுத்த தாமரை..
Bigg Boss thamarai open talk : நாங்களா சண்டை போடுறதில்லை மாமா.. அவங்க தான் சண்டை போட சொல்றாங்க என வசமாக போட்டுக்கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை காலி செய்துள்ளார் தாமரை செல்வி.

bigg boss thamarai
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 80 நாட்களை எட்டியுள்ள நிலையில், தற்போது விறுவிறுப்பான ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் தாமரையின் கணவர் (Thamarai) மற்றும் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்தனர்.
bigg boss thamarai
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி சுமார் 3 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், இதுவரை தங்களுடைய குடும்பத்தினரை பார்க்காமல் இருந்த போட்டியாளராகளை, கடந்த வாரம் முதல் அவர்களுடைய குடும்பத்தினர் சந்தித்து வருகிறார்கள்.
bigg boss thamarai
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 80 நாட்களை எட்டியுள்ள நிலையில், தற்போது விறுவிறுப்பான ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் தாமரையின் கணவர் (Thamarai) மற்றும் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்தனர்.
bigg boss thamarai
போட்டியாளர்களும் இத்தனை நாள் அவர்களை பார்க்காமல் ஏங்கியதை தங்களுடைய கண்ணீர் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுவரை அக்ஷரா குடும்பத்தினர், சிபி குடும்பத்தினர், ராஜு மோகன் குடும்பத்தினர், பிரியங்கா குடும்பத்தினர், நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் வந்த நிலையில், தற்போது தாமரையின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
bigg boss thamarai
முதலில் தாமரையின் மகன் வருவதையும், பின்னர் தாமரையின் கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதையும் ப்ரோமோ மூலம் காட்டியுள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.
bigg boss thamarai
கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகன் தன்னிடம் இல்லை, அவனுக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறிய தாமரையின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவே இன்றைய தினம் தாமரையின் மகன் உள்ளே வந்துள்ளார்.
bigg boss thamarai
கணவரை பார்த்ததும், தாமரை கண்ணீர் விட்டு அழுதார், பின்னர் தாமரையின் குடும்பத்தினர் மற்றும் கணவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் புரோமோவும் வெளியாகியுள்ளது. கணவரை பார்த்ததும் கட்டி அணைத்து மாமா என வாய் நிறைய கூப்பிட்டு அவரை வரவேற்றுள்ளார்.
bigg boss thamarai
தன்னுடைய மனைவிக்கு ஆசையாக வாங்கி வந்த பூவை தலையில் வைத்து விட்டு அழகு பார்க்கிறார். எனவே இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை மகனின் குறும்பு தனத்தாலும், அவரது கணவரின் வருகையாலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
bigg boss thamarai
அப்போது கணவருடன் பேசிக்கொண்டு இருக்கையில் நாங்களாக சண்டை போடவில்லை அவர்கள் தான் சண்டை போடா சொல்றாங்க என வெகுளியாக கூறி பிக் பாஸ் நிகழ்ச்சி தாரர்களை மாட்டி கொடுத்து விட்டார் தாமரை. ஏற்கனவே இது ரியாலிட்டி இல்லை ஸ்கிரிப்ட் என பலரும் சிஒல்லி வரும் நிலையில் தாமரையில் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.