MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan: மிகப்பெரிய தொகைக்கு 'ஜனநாயகன்' ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

Jana Nayagan: மிகப்பெரிய தொகைக்கு 'ஜனநாயகன்' ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது கடைசி படமான, 'ஜனநாயகன்' பட, ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 22 2025, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விஜய் தற்போது தனது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, ரெபே மோனிகா ஜான், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 

25
அடுத்த ஆண்டு ஜனநாயகம் ரிலீஸ் திட்டமா?

அடுத்த ஆண்டு ஜனநாயகம் ரிலீஸ் திட்டமா?

கே வி என் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அரசியல் நோக்கத்துடன் வரும் 2026ஆம் ஆண்டு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Jana Nayagan: 25 வருடங்களுக்கு பின் தளபதியின் 'ஜனநாயகன்' படத்தில் இணைந்த குஷி பட நடிகர்!

35
ஜனநாயகம் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிலிக்ஸ்

ஜனநாயகம் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிலிக்ஸ்

முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பான் இந்தியா படமாக இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண படக்குழு 
திட்டமிட்டுள்ளது.  இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. 

45
தியேட்டர் உரிமையை கைப்பற்ற நிலவும் போட்டி:

தியேட்டர் உரிமையை கைப்பற்ற நிலவும் போட்டி:

இதே போன்று வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இது தவிர கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், இதற்க்கு முன் விற்பனை செய்யப்பட்ட தொகையை விட, அதிக தொகையை தயாரிப்பு நிறுவனம் டிமாண்ட் செய்வதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?

55
ஷூட்டிங் முடிவதற்கு முன்பே ஜன நாயகன் படத்தை கைப்பற்றிய நெட்பிலிக்ஸ்

ஷூட்டிங் முடிவதற்கு முன்பே ஜன நாயகன் படத்தை கைப்பற்றிய நெட்பிலிக்ஸ்

இன்னும் 25 நாட்களில் படத்தை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னர் தீவிர அரசியல் கவனம் செலுத்த தயாராகி உள்ளார்.  இந்த நிலையில் தான், ஷூட்டிங் முடிவதற்கு முன்பே இந்த படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் பல கோடி கொடுத்து இந்த படத்தை கைப்பற்றி உள்ளதாக  கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜன நாயகன்
தளபதி விஜய்
தமிழ் சினிமா
ஓடிடி
பூஜா ஹெக்டே

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image2
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image3
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved