ஜம்முனு மாப்பிள்ளை போல் வந்து கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்!
Vijay Attend Keerthy Suresh Marriage : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்ள கோவா சென்றிருந்த நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vijay, Keerthy Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை தான் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளார். இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் களைகட்டி உள்ளன. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்ள ஏராளமான பிரபலங்கள் கோவாவுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
Keerthy Suresh Wedding
அந்த வகையில் நடிகர் விஜய்யும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்ள கோவா சென்றுள்ளார். அங்கு மாப்பிள்ளை போல் ஜம்முனு பட்டு வேட்டி சட்டை அணிந்துகொண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என வியந்து பார்த்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படத்தைவிட அதில் கலந்துகொள்ள சென்ற விஜய்யின் புகைப்படம் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படியுங்கள்... நீங்க சொன்னது சரி தான்; 15 வருட காதலை வெளிப்படையா அறிவித்த கீர்த்தி சுரேஷ்; இனி டும் டும் டும்!
Vijay at Keerthy Suresh Wedding
நடிகர் விஜய்யும், கீர்த்தி சுரேஷும் முதன்முறையாக பைரவா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படத்திலும் இந்த ஜோடி நடித்திருந்தது. கீர்த்தி சுரேஷ் நடிகை என்பதை தாண்டி அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையும் கூட. தற்போது வரை விஜய் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவார். அந்த அளவுக்கு தீவிரமான ரசிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய்க்கும் கீர்த்தியை ஒரு தோழியாக பிடிக்கும் என்பதால் அவர் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
keerthy weds Anthony Thattil
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் இயக்குனர் அட்லீ அவரது மனைவி பிரியா, ஆகியோரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அட்லீயின் நெருங்கிய தோழியான கீர்த்தி சுரேஷ், அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள பேபி ஜான் என்கிற பாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இது விஜய்யின் தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கீர்த்திக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... காஜல் அகர்வால் முதல் கீர்த்தி சுரேஷ் வரை; நண்பர்களையே காதலித்த தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட்!