அடங்காத விஜய் ரசிகர்கள்... விழுப்புரத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு...!

First Published 22, Sep 2020, 11:47 AM

அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் அவரை எம்.ஜி.ஆர். உடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டுவது அதிமுக தொண்டர்களின் கோபத்தை கிளறி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தனது விஜய் மக்கள் மன்றம் மூலமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். அதில் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் பலரும் இணைந்துள்ளனர்.  இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் அரசிலுக்கு வரவேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது தற்போது அதிகரித்து வருகிறது.

அப்படி வித்தியாசமாக சிந்தித்து போஸ்டர் அடித்து நாரதர் கலகத்தை ஆரம்பித்து வைப்பார்கள். அவர்கள் அடிக்கும் போஸ்டர் சிரிப்பையும் வரவழைக்கும். சிந்தனையையும் தூண்டும்.

சமீபத்தில் விஜய் திருமண நாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியது. விஜய்யை எம்.ஜி.ஆர். போலவும், சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் புகைச்சலையும் கிளப்பியது.

கடந்த ஜூன் மாதம் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும், பெரியாரும் இருப்பது போல் ஒட்டப்பட்டுள்ளது. அதன் மேலே, நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார் எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது.

தற்போது 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகைப்படங்களில் விஜய் முகத்தை ஒட்ட வைத்து போஸ்டர் அடித்துள்ளனர். மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்? என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுவற்றில் அத்துமீறி விஜய் ரசிகர்கள்  சுமார் 50 அடி நீளத்திற்கு  ஒட்டிய பிரம்மாண்ட் போஸ்டர்  மக்களை கடுப்பேற்றியது. அந்த போஸ்டரில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை உயர்த்திட, அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, சட்டமன்றத்தில் கையெழுத்திட, மக்கள் தளபதியாக விரைந்து எழுக! நல்லாட்சி தருக! புரட்சி தமிழனே! என்று வாசகங்களும், விஜய் படத்துக்கு பக்கத்திலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோ இருந்ததும் அதிமுகவினர் அதிர்ச்சியடைய வைத்தது.

அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் அவரை எம்.ஜி.ஆர். உடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டுவது அதிமுக தொண்டர்களின் கோபத்தை கிளறி வருகிறது. தற்போது விழுப்புரத்தில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். படத்திற்கு முன்பு அவரைப் போலவே விஜய் கை அசைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் மக்கள் நலன் காக்க... மாணவர்களின் குறை தீர்க்க... தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கே கிடைத்திட... நாடே எதிர்பாக்கும் ... நாளைய முதல்வரே... என்ற வாசங்கள் இடம் பெற்றுள்ளது.

loader