- Home
- Cinema
- Rajini 169 movie : தலைவர் 169 படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு! ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் ரெடியாம்
Rajini 169 movie : தலைவர் 169 படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு! ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் ரெடியாம்
நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ரஜினியின் ‘தலைவர் 169’ (Thalaivar 169) படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.
அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு, மிஷ்கின் (mysskin) என பல்வேறு பெயர்கள் அடிபட்ட வண்ணம் இருந்தன.
இந்த லிஸ்டில் கடைசியாக சேர்ந்தவர் நெல்சன் (Nelson). தற்போது விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன், அண்மையில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, காத்திருந்த இயக்குனர்களையெல்லாம் கழட்டிவிட்டு, நெல்சனுக்கு ஓகே சொல்லிவிட்டார் ரஜினி.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்க உள்ளார். மேலும் ரஜினி கோர்ட் சூட்டில் அணிந்து கெத்தான தோற்றத்தில் இருக்கும் மாஸ் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், ‘தலைவர் 169’ (Thalaivar 169) படத்தின் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் ரெடியாகி உள்ளதாம். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, 5 மாதங்களில் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகளை முடித்து அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்.... ரஜினியுடன் டூயட் பாட பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்த நெல்சன்... பான் இந்தியா படமாக தயாராகிறதா தலைவர் 169?