மாரீசன் vs தலைவன் தலைவி - பாக்ஸ் ஆபிஸில் டாப்பு யார்? டூப்பு யார்? வசூல் நிலவரம் இதோ
பகத் பாசில், வடிவேலு நடித்த மாரீசன் மற்றும் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Thalaivan Thalaivii and Maareesan Box Office
ஜூலை மாதம் தமிழ் சினிமாவில் முதல் மூன்று வாரங்களில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்ததால், பாக்ஸ் ஆபிஸ் வசூலும் மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், ஜூலை மாதத்தின் நான்காவது வாரத்தில் தலைவன் தலைவி மற்றும் மாரீசன் திரைப்படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூலித்துள்ளது. வசூலில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாரீசன்
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ள படம் மாரீசன். இது அந்நிறுவனத்தின் 98வது படைப்பாகும். 2023ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்ரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கலைச்செல்வன் சிவாஜி, இசை யுவன் சங்கர் ராஜா. படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங், கலை இயக்கம் மகேந்திரன்.
மாரீசன் பட வசூல்
இப்படம் கடந்த ஜூலை 25-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் முதல் நாளில் வெறும் 75 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. இதையடுத்து இரண்டாம் நாளில் பிக் அப் ஆன இப்படம் ரூ.1.37 கோடி வசூலித்தது. மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் நாளைக் காட்டிலும் கம்மியாகவே வசூலித்துள்ளது. அதன்படி மாரீசன் திரைப்படம் மூன்றாம் நாளில் ரூ.1.21 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இதன்மூலம் மூன்று நாட்கள் முடிவில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.3.33 கோடி வசூலித்திருக்கிறது.
தலைவன் தலைவி
ரொமாண்டிக் நகைச்சுவைப் படமான இதில் விஜய் சேதுபதி ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன் அவருடைய மனைவி பேரரசியாக நடித்திருக்கிறார். ஹோட்டல் உரிமையாளராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநர் - கே. வீரசமன். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் இ. ராகவ் மேற்கொண்டுள்ளார்.
தலைவன் தலைவி வசூல்
தலைவன் தலைவி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் முதல் நாளில் ரூ.4.5 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் ரூ.7.25 கோடி வசூலித்தது. பின்னர் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி நேற்று மட்டும் இப்படம் ரூ.8.25 கோடி வசூலித்திருந்தது. இப்படம் மூன்று நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.20 கோடி வசூலித்திருக்கிறது. உலகளவில் இதன் வசூல் 25 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால் இப்படம் விரைவில் 100 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.