ThalaAjith : அஜித் சொல்லி கூட கேட்கலையே...!மீண்டும் ட்ரெண்டாகும் தல..
Thala Ajith : தல என அழைக்கவேண்டாம் என அஜித் குறியும் ஏற்க மறுக்கும் ரசிகர்கள் வலிமை கொண்டாட்டத்துடன் சேர்த்து தல அஜித் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்..

Ajith
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார்.
valimai
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
valimai
மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
valimai
இப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை பார்க்க அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
valimai
இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
valimai
வலிமை படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு பார்க்க வலிமை படக்குழுவினரும் வந்துள்ளனர். சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹூமா குரேஷி, வில்லன் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் ரசிகர்களோடு காலை 4 மணிக்கே திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்தனர்.
valimai
அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் காலை முதல் இதுவரை கொஞ்சம் கூட குறையவில்லை என்றே சொல்லலாம்..இன்னும் சமூகவலைத்தளத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வலிமையை கொண்டாடி வருகின்றனர்..
valimai
இந்நிலையில் தல என அழைக்கவேண்டாம் என அஜித் குறியும் ஏற்க மறுக்கும் ரசிகர்கள் வலிமை கொண்டாட்டத்துடன் சேர்த்து தல அஜித் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்..