MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இவர்களை நம்பித்தான் தமிழ் சினிமாவே இருக்க போகிறதா? சிவகார்த்திகேயன் தான் இனி எல்லாமேவா?

இவர்களை நம்பித்தான் தமிழ் சினிமாவே இருக்க போகிறதா? சிவகார்த்திகேயன் தான் இனி எல்லாமேவா?

Tamil Cinema Next Genetation Future Stars : ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய் ஆகியோருக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆளக் கூடிய டாப் பெஸ்ட் நடிகர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

3 Min read
Rsiva kumar
Published : Jul 18 2025, 11:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லக் கூடிய வருங்கால நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா?
Image Credit : X

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லக் கூடிய வருங்கால நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா?

Tamil Cinema Next Genetation Future Stars : தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பிறகு சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் தான் சினிமாவில் கோலூன்றி வந்தனர். இவர்களது வரிசையில் அடுத்த இடங்களில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களாக உருவெடுத்து வரும் இளம் நடிகர்கள் பலர் உள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கனவே தங்கள் திறமையை நிரூபித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரங்களாக வலம் வர வாய்ப்புள்ள சில இளம் நடிகர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

28
நல்ல வரவேற்பைப் பெற்று வரும நடிகர்கள்:சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan):
Image Credit : our own

நல்ல வரவேற்பைப் பெற்று வரும நடிகர்கள்:சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan):

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவே இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அமரன் படம் தான். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. நகைச்சுவை, எமோஷன், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக நடித்து, குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவருடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

38
தனுஷ் (Dhanush):
Image Credit : Asianet News

தனுஷ் (Dhanush):

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்ற நடிகருமான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் குபேரா. தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் (பாலிவுட்) மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்புத் திறமையும், கதைத் தேர்வும் அவரை ஒரு வலுவான நட்சத்திரமாக நிலைநிறுத்தியுள்ளது. நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என்று பன்முக கலைஞராக சினிமாவில் சாதனைகள் படைத்து வருகிறார்.

48
விஜய் சேதுபதி (Vijay Sethupathi):
Image Credit : Asianet News

விஜய் சேதுபதி (Vijay Sethupathi):

'மக்கள் செல்வன்' என அழைக்கப்படும் இவர், வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மிகவும் எளிமையான ஹீரோ. எளிமையான மனிதர். ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்த வேடமாக கச்சிதமாக பொருந்தக் கூடியவர்.

58
வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்கள்: கவின் (Kavin):
Image Credit : our own

வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்கள்: கவின் (Kavin):

சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவிற்கு வந்தவர்களில் நடிகர் கவினும் ஒருவர். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த கவினுக்கு 'டாடா' படம் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனைப் போன்று சினிமாவில் வலம் வரக் கூடிய எல்லா தகுதிகளும் இவரிடம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

68
பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan):
Image Credit : our own

பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan):

தமிழ் சினிமா கொண்டாடும் அடுத்த ஒரு சூப்பர் ஹீரோ பிரதீப் ரங்கநாதன். இவர் எல்லாம் என்னத்த படம் கொடுக்க போகிறார் என்று கேள்விகள் கேட்டவர்களுக்கு எல்லாம் தனது 'லவ் டுடே' படம் மூலமாக அடையாளத்தை கொடுத்துள்ளார். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப டிரெண்ட் செட்டிங்க் பட கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

78
மணிகண்டன் (K Manikandan):
Image Credit : k manikandan instagram

மணிகண்டன் (K Manikandan):

'ஜெய்பீம்', 'குட் நைட்' போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தவர். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்ந்தெடுக்கும் இவரின் அணுகுமுறை இவருக்கு நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது.

அசோக் செல்வன் (Ashok Selvan): 'சூது கவ்வும்' மூலம் அறிமுகமாகி, 'போர்தொழில்', 'ப்ளூ ஸ்டார்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார். நல்ல கதை தேர்வும், இயல்பான நடிப்பும் இவரின் பலம்.

88
அர்ஜுன் தாஸ் (Arjun Das):
Image Credit : Google

அர்ஜுன் தாஸ் (Arjun Das):

துருவ் விக்ரம் (Dhruv Vikram): நடிகர் விக்ரமின் மகன். 'ஆதித்ய வர்மா', 'மகான்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அர்ஜுன் தாஸ் (Arjun Das): 'கைதி', 'மாஸ்டர்' போன்ற படங்களில் தனது தனித்துவமான குரல் மற்றும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். இவருக்கு என ஒரு தனித்தன்மை உள்ளது.

வசந்த் ரவி (Vasanth Ravi): 'தரமணி', 'ராக்கி' போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையை நிரூபித்தவர். இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு சிறந்த நடிகராக வலம் வருவார்.

ஹரீஷ் கல்யாண் (Harish Kalyan): 'பியார் பிரேமா காதல்' மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து சில நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

இவர்கள் தவிர, இன்னும் சில இளம் நடிகர்களும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சரியான கதைத் தேர்வு, கடின உழைப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவர்களில் பலர் தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களாக உருவாகும் வாய்ப்பு அதிகம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்
திரைப்படம்
விஜய் (நடிகர்)
தனுஷ்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved