- Home
- Cinema
- Dr.Simbu : இனி என் மகன் வெறும் சிம்பு இல்ல.... டாக்டர் சிம்பு!! - முடியை சிலுப்பிவிட்டு கெத்து காட்டும் டி.ஆர்
Dr.Simbu : இனி என் மகன் வெறும் சிம்பு இல்ல.... டாக்டர் சிம்பு!! - முடியை சிலுப்பிவிட்டு கெத்து காட்டும் டி.ஆர்
வேல்ஸ் யூனிவர்சிட்டி சார்பாக இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மகன் டாக்டர் பட்டம் வாங்கியதை நேரில் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார் டி.ராஜேந்தர்.

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தரின்( T Rajendhar) மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தன்னுடைய தந்தையின் படங்களில் மட்டுமே நடித்து வந்த சிம்பு, பின்னர் ஹீரோவாக மாறி ஆக்ஷன், காதல், காமெடி என நடிப்பில் தனி முத்திரை பதித்தார்.
இவர் தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருகிறார். நடிகர் சிம்புவுக்கு ஏகப்பட்ட திறமை இருந்தாலும், எப்போதும் அவரை சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இதுவே ஒரு கட்டத்தில் அவருக்கு மைனஸாகவும் அமைந்தது.
அவர் எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும், சினிமாவில் தோல்விகளை சந்தித்தாலும் அவர் இத்தனை ஆண்டுகள் திரையுலகில் வலிமையோடு நடித்து வருவதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான். அவர்கள் கொடுக்கும் உத்வேகம் தான் சிம்புவை மேலும் மேலும் உயர்த்தி வருகிறது.
இவரை பற்றி குறையாக அடுக்கி வந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மூக்கில் மீது விரல் வைக்கும் அளவுக்கு, தற்போது சிம்பு ஆள் மட்டும் மாறாமல் தன்னையே ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொண்டு சர்ச்சைகைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார். இவரது டெடிகேஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக அமைத்தது என்றால் அது 'மாநாடு' (Maanaadu) படத்தின் வெற்றி என கூறலாம்.
இந்த வெற்றிக்குப் பின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில், அவருக்கு வேல்ஸ் யூனிவர்சிட்டி சார்பாக இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மகன் டாக்டர் பட்டம் வாங்கியதை நேரில் பார்த்த டி.ஆர் - உஷா ராஜேந்தர் தம்பதி ஆனந்த கண்ணீர் விட்டதோடு மட்டுமின்றி மகனை முத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக டி.ஆர்., ‘இனி என் மகன் டாக்டர் சிம்பு’, என முடியை சிலுப்பிவிட்டு கெத்தாக சொல்கிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.