MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Simbu : மரணப் படுக்கையில் டி.ராஜேந்தர்... சிம்புவின் நடத்தை தான் காரணமா?

Simbu : மரணப் படுக்கையில் டி.ராஜேந்தர்... சிம்புவின் நடத்தை தான் காரணமா?

Simbu : சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

2 Min read
Author : Ganesh A
Published : May 27 2022, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் டி.ராஜேந்தர். இவரது மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பொதுவாக படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை தவிர்த்து வந்தவர் டி.ராஜேந்தர். 

26

ஆனால் அவரது மகன் சிம்புவோ, டி.ஆர் மகனா இப்படி என கேட்கும் அளவுக்கு நடிகைகளுடன் லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சிம்பு என்றாலே வம்பு தான் என சொல்லும் அளவுக்கு எண்ணிலடங்கா சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் சிம்பு. இது இன்றளவும் தொடர்ந்து வருகிறது. 

36

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு, தனது தந்தைக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

46

இந்நிலையில், டி.ஆரின் இந்த திடீர் உடல் நலக்குறைவுக்கு காரணம் அவரது மகன் சிம்பு தான் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மகன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், டி.ஆர். மன வருத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகத் தான் அவருக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

56

நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் காதல் வலையில் சிக்கிய சிம்பு, பின்னர் அவர்கள் இருவரையும் பிரேக் அப் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை நிதி அகர்வாலை சிம்பு காதலித்து வருவதாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இதுகுறித்து சிம்பு தரப்பு எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை.

66

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சீரியல் நடிகை ஸ்ரீநிதி என்பவர் நடிகர் சிம்பு தனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி சிம்புவின் வீட்டு முன் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்த விவகாரம் தான் தற்போது டி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கோலிவுட் வட்டாரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இதுதான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்.... Barroz : காஷ்மோரா கார்த்தி கெட்-அப்பில் மோகன்லால் - பரோஸ் படத்தின் போஸ்டர்கள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி. ராஜேந்தர்
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் யார் தெரியுமா? வாயடைத்துப் போன கோலிவுட்!
Recommended image2
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரீமேக் படமா? வெடித்த புது சர்ச்சை - உண்மை என்ன?
Recommended image3
பல்லவனை அரெஸ்ட் பண்ணிய போலீஸ்... தம்பியை காப்பாற்றினாரா சோழன்? அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved