MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யா மீது நம்பிக்கை இல்லையா? ரெட்ரோவை கம்மி விலைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

சூர்யா மீது நம்பிக்கை இல்லையா? ரெட்ரோவை கம்மி விலைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

Suriyas Retro Movie OTT Rights Acquired by Netflix : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமையை ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் அதிக தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 08 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கார்த்திக் சுப்புராஜ், ரெட்ரோ உரிமத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ், ரெட்ரோ உரிமத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

Suriyas Retro Movie OTT Rights Acquired by Netflix : அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த படங்கள் ஏராளம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று எல்லா மொழியிலும் இது போன்று படங்கள் உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைக்கு வந்தது. ஆனால், இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வரையில் தான் வசூல் குவித்திருந்தது. இதன் மூலமாக 'கங்குவா' படத்தால் ஏற்பட்ட நஷ்டம் சுமார் 250 கோடி ரூபாய் என்று தகவல் வெளியானது. கங்குவா படத்தின் 2ஆம் பாகமும் உருவாகும் என்று கங்குவா வெளியான போதே அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கங்குவாவிற்கு ஆதரவாக பேசியிருந்தனர். இந்த நிலையில் இப்போது சூர்யா ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பூஜா ஹெக்டேயின் ரெட்ரோ படம்

பூஜா ஹெக்டேயின் ரெட்ரோ படம்

அறிவிப்பிலிருந்தே 'ரெட்ரோ' படம் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் அப்டேட்கள் அனைத்தும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் என்பதால், படம் குறைந்தபட்ச உத்தரவாதம் அளிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தப் படம் இந்த ஆண்டு வெளியாகும்.

35
ரெட்ரோ நெட்பிளிக்ஸ்

ரெட்ரோ நெட்பிளிக்ஸ்

ரெட்ரோ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஷ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

45
ரெட்ரோ ஓடிடி உரிமம்

ரெட்ரோ ஓடிடி உரிமம்

மே 1 ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரமாக இருக்கின்றனர். இந்த் நிலையில் தான் ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 80 கோடி ரூபாய்க்கு இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னதாக வந்த கங்குவா படத்தை கூட அமேசான் ரூ.100 கோடி கொடுத்து வாங்கிருந்தது. அப்படியிருக்கும் போது கங்குவா படத்தை விட ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் ரூ.80 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பது சற்று வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது.

55
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதி

சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதி

திரையரங்குகளில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடந்தால், 'ரெட்ரோ' படம் சூர்யாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று சூர்யா தனது 45ஆவது படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும், நட்டி, லப்பர் பந்து சுவாசிகா, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு, ஷிவதா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். டிரீம் வாரியர்ஸ் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சாய் அபயங்கார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved