- Home
- Cinema
- இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் பொன்னம்பலம்..! கமலை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்ட முக்கிய செலவு
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் பொன்னம்பலம்..! கமலை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்ட முக்கிய செலவு
சண்டை பயிற்சி கலைஞரும், வில்லன் நடிகருமான பொன்னம்பலம், நேற்று முன் தினம் (ஜூலை 9 ஆம் தேதி) அன்று சிறுநீரக கோளாறு காரணமாக, சென்னை அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நடிகர் கமலஹாசன் ஏற்கனவே இவருடைய மருத்துவ செலவுகளை ஏற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உதவியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமலஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம், நடிப்பை தாண்டி சிறந்த நண்பராகவும் கமலுடன் பழகி வந்தவர் பொன்னம்பலம்.

80 மற்றும் 90 களில் வெற்றி பெற்ற, முத்து, நாட்டாமை, உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வில்லனாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இவர் மீது வேண்டும் என்றே, சில பழிகள் போடப்பட்டாலும் இவரை மக்கள் பல முறை காப்பாற்றினர்.

வில்லனாகவே பார்க்கப்பட்ட இவரை ரசிகர்கள் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அமைதியாக விளையாடியதால், சுவாரஸ்யமாக இவரால் கன்டென்ட் கொடுக்க முடியவில்லை. எனவே கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார். இவரை நடிகர் கமலஹாசனே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சென்னையில் மனைவி, மகள், மகனுடன் வாழ்ந்து வரும் இவருக்கு திடீர் என, சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இதை அறிந்து நடிகர் கமலஹாசன் உடனடியாக மருத்துவ மனைக்கு விரைந்து, அவருடைய குடும்ப சூழ்நிலையை கருதி மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவருடைய குழந்தைகளில் படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டார். மேலும் அடிக்கடி, போன் செய்து அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்.