MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவி சீரியல்களை வாஷ் அவுட் பண்ணிய சன் டிவி தொடர்கள் - இந்த வார டாப் 10 TRP லிஸ்ட் இதோ

விஜய் டிவி சீரியல்களை வாஷ் அவுட் பண்ணிய சன் டிவி தொடர்கள் - இந்த வார டாப் 10 TRP லிஸ்ட் இதோ

டாப் 10 டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. அதன் பட்டியல் இதோ.

2 Min read
Author : Ganesh A
| Updated : Nov 14 2024, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
serial TRP

serial TRP

தமிழ்நாட்டில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவி தான் என்று இருந்த நிலையில், போகப் போக விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. ரசிகர்களின் வரவேற்பால் வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது 7 நாட்களும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியல்களின் வரவேற்பை தீர்மானிப்பது டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் இந்த ஆண்டின் 45-வது வாரத்திற்கான டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது.

24
Tamil serial TRP

Tamil serial TRP

இந்த பட்டியலில் கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பின்னுக்கு தள்ளி உள்ள ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல், 5.59 டிஆர்பி புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரமும் 6.12 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 6.45 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. டாப் 10ல் உள்ள ஒரே ஒரு விஜய் டிவி சீரியலும் இதுதான்.

இதையும் படியுங்கள்... குறையாத காதல்; கணவரோடு 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்! குவியும் வாழ்த்து!

34
Top 10 Tamil Serial TRP

Top 10 Tamil Serial TRP

கடந்த வாரம் சன் டிவியில் தொடங்கப்பட்ட ரஞ்சனி சீரியல் முதல் வாரமே சக்கைப்போடு போட்டு டிஆர்பி ரேட்டிங்கில் 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.87 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் இராமாயணம் சீரியல் இந்த வாரமும் 8.22 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தை தக்கவைத்து உள்ளது. அடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் கேபி நடித்துள்ள மருமகள் சீரியல் 8.70 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.

44
Kayal Serial TRP

Kayal Serial TRP

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சன் டிவியின் சுந்தரி சீரியல், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8.80 டிஆர்பி புள்ளிகளுடன் 4-ம் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் முதல் மூன்று இடங்களை பிடித்த சுந்தரி, மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே ஆகிய சீரியல்கள் இந்த வாரமும் அதே இடங்களை தக்க வைத்து உள்ளன. இதில் 3ம் இடத்தில் உள்ள சிங்கப்பெண்ணேவுக்கு 9.06 புள்ளிகளும், 2ம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.57 புள்ளிகளும், முதலிடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 10.02 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... த்ரிஷா முதல் கௌசல்யா வரை; காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என முடிவு செய்த 7 முன்னணி நடிகைகள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
Recommended image2
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image3
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved