'கொலை மிரட்டல்'...சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

salman khan
பஞ்சாபின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு திடீர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
salman khan
பாப் பாடகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னாய் ஏற்கனவே, ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 2018 - ஆம் ஆண்டு சல்மான் கான் நீதிமன்றத்திற்கு வந்த போது, நாங்கள் " ஜோத்பூரில் சல்மான் கானைக் கொல்வோம்" என்று கூறியுள்ளார். இதனால் தான் சல்மான் கான் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
salman khan
முன்னதாக காலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சன்னி என்ற ராகுல், சல்மான் கானைக் கொல்லத் திட்டம் தீட்டியதாகக் கூறினார். இது குறித்து பேசியுள்ள காவல்துறை அதிகாரி, சன்னியை போலீசார் விசாரித்தபோது, "சல்மான் கானை கொலை செய்வதற்காக மும்பைக்கு வந்திருப்பதை ஒப்பக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
salman khan
மேலும் சல்மான் கானின் ஒட்டுமொத்த பாதுகாப்பை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். ராஜஸ்தானில் இருந்து வந்த கும்பலால் எந்த விதமான மோசமான செயலும் நிகழ்ந்து விடாமல் சல்மான் கான் குடியிருப்பை சுற்றி போலீசார் இருப்பார்கள் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.