பழம்பெரும் நடிகர் மற்றும் அதிமுக அரசியல்வாதியின் மகன் திமுகவில் இணைந்தார்..!
First Published Nov 24, 2020, 5:00 PM IST
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலவேறு நடிகர்களுடன் இணைந்தும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகரும், அரசியல் வாதியுமான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளார்.

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த, 'பராசக்தி' படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை பதித்தவர் எஸ்.எஸ்.ஆர். இதை தொடர்ந்து, பணம், மனோகரா, சொர்க்க வாசல், பூம்புகார், சாரதா, என 100 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

நடிப்பை தவிர, இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களோடு விளங்கினார். குறிப்பாக அப்போதைய புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சேரும்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?