அடுத்தடுத்து அடி வாங்கும் ஆலியா பட்... இந்த பிரபல இயக்குநர் இப்படி பண்ணிட்டாரே...!
நெபோடிசம் பிரச்சனையால் அடுத்தடுத்து அடி வாங்கி வந்த ஆலியா பட் தற்போது முன்னணி இயக்குநர் ஒருவரின் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகின் வாரிசு அரசியலும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் தான் காரணம் என்று கூறப்பட்டது.
இதனால் வாரிசு நடிகர்கள், நடிகைகள் மீது ரசிகர்களின் கோபம் திரும்பியது. அதிலும் குறிப்பாக ஆலியா பட், சோனம் கபூர் மீது செம்ம கடுப்பில் உள்ளனர்.
நெபோடிசம் பிரச்சனையால் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமானோரை இழந்துள்ள ஆலியா பட்டிற்கு “சதக் 2” பட டிரெய்லர் பெரிய இடியாக அமைந்தது.
கடந்த 11ம் தேதி யூ-டியூப் வெளியான சதக் 3 ட்ரெய்லர் ஒரு கோடிக்கும் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்று, உலகிலேயே அதிக டிஸ்லைக்குகளை பெற்ற வீடியோ என சாதனை படைத்தது.
மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் அலியா பட், பூஜ பட் நடித்திருக்கும் இந்த படத்தின் டிரெய்லரை டிஸ்லைக் செய்ய வேண்டுமென சோசியல் மீடியாவில் கோரிக்கை வைத்த சுஷாந்த் ரசிகர்கள் அதை பக்காவாக செய்து முடித்தனர்.
இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வரும் “ஆர் ஆர் ஆர்” படத்தில் இருந்து ஆலியா பட் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலியா பட் மீது எதிரொலிக்கும் ரசிகர்களின் எதிர்ப்பால் தங்களது படம் பாதிக்கப்படும் என நினைக்கும் தயாரிப்பாளர்கள் அவரை படங்களில் இருந்து நீக்கி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஆலியா பட்டை தனது படத்திலிருந்து நீக்கியுள்ள ராஜமெளலி ப்ரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.