MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீரியல் நடிகை ஸ்ரித்திகா - கர்ப்பத்தை அறிவித்த நடிகர் SSR ஆரியன்!

சீரியல் நடிகை ஸ்ரித்திகா - கர்ப்பத்தை அறிவித்த நடிகர் SSR ஆரியன்!

சீரியல் நடிகை ஸ்ரித்திகா மற்றும் எஸ் எஸ் ஆர் ஆரியன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளனர்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Feb 01 2025, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஸ்ரித்திகா

ஸ்ரித்திகா

மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரித்திகா மாடலிங் துறையில் கால் பதித்த பின்னர், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். அந்த சமயத்தில் கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும், 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நடிகர் சக்திக்கு தங்கையாக நடித்திருந்தார் ஸ்ரித்திகா. இதைத் தொடர்ந்து தன்னைத் தேடி வந்த சீரியல் வாய்ப்புகளை ஏற்று கொண்டு நடிக்க துவங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நாதஸ்வரம் சீரியல்:

நாதஸ்வரம் சீரியல்:

சன் டிவியில் இவர் நடித்த 'கலசம்' சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அவ்வப்போது  சில திரைப்படங்களிலும் தலை காட்டினார். முழு நேர சீரியல் நடிகையாக ஸ்ரித்திகாவுக்கு, மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது திருமுருகன் இயக்கி நடித்த நாதஸ்வரம் சீரியல். 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்த சீரியல் ஒளிபரப்பானது.  இதைத்தொடர்ந்து மாமியார் தேவை,உறவுகள் சங்கமம், வைதேகி, உரிமை, குலதெய்வம், என் இனிய தோழி, கல்யாண பரிசு,  உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சீரியல்-களில் நடித்தார்.

36
முதல் திருமணத்தில் விவாகரத்து:

முதல் திருமணத்தில் விவாகரத்து:

முன்னணி சீரியல் நடிகையாக இருக்கும் போதே, சனீஸ் என்பவரை 2020-ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய ஸ்ரித்திகாவுக்கும் அவருடைய கணவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில், இருவரும் இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

46
ஆரியனுக்கும் ஸ்ரித்திகாவுக்கும் ஏற்பட்ட காதல்

ஆரியனுக்கும் ஸ்ரித்திகாவுக்கும் ஏற்பட்ட காதல்

விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் முழு கவனம் செலுத்திய ஸ்ரித்திகா எஸ் எஸ் ஆர் ஆரியன் ஹீரோவாக நடித்த மகராசி தொடரில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இருவரும் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது, ஆரியனுக்கும் ஸ்ரித்திகாவுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. ஆரியனும் ஏற்கனவே நடிகை நடிகை நிவேதிகா பங்கஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தவர் என்பதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

56
ஆரியனை கரம் பிடித்த ஸ்ரித்திகா

ஆரியனை கரம் பிடித்த ஸ்ரித்திகா

அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரித்திகா மற்றும் ஆரியன் திருமணம், ரிஜிஸ்டர் ஆபிசில் மிகவும் எளிமையாக நடந்த நிலையில், ரிசப்ஷன் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தற்போது ஸ்ரித்திகா - ஆரியன் தம்பதி பெற்றோர் ஆக உள்ள தகவலை தங்களுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

66
கர்ப்பத்தை அறிவித்த சீரியல் ஜோடி

கர்ப்பத்தை அறிவித்த சீரியல் ஜோடி

இதுகுறித்து அவர்கள் போட்டுள்ள பதிவில், மிகுந்த சக்தியுடன் பெரும் பொறுப்பும் வருகிறது! எங்கள் பயணம் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மிகுந்த அன்பு மற்றும் ஆதரவுடன் தொடர்கிறது, எனவே இப்போது நாங்கள் பெற்றோராக எங்கள் வாழ்க்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிக்குள் அடியெடுத்து வைக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் சர்வவல்லமையுள்ளவரின் அனைத்து ஆசீர்வாதங்களாலும் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை உலகிற்கு அறிவிக்கிறோம்! மேலும் பதிவுகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள், எங்களைப் பின்தொடர மறக்காதீர்கள், ஏனெனில் எங்கள் சமூக ஊடகக் குடும்பத்திலிருந்து நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்,  என தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved