என்னைக்கு டாப்பை அவிழ்த்தனோ.. அன்னைக்கே போச்சு.. வெக்ஸான ஸ்ரீரெட்டி
நான் எல்லோருக்கும் முன்னால் ஆடையை கழட்டி போராட்டம் நடத்திய பொழுது என் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, தம்பிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது.

sri reddy
பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர் மீ-டு புகார் கொடுத்து வந்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை இவர் ஊடகங்கள் முன்னிலையில் புகார் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அரை நிர்வாணமாக பொதுவெளியில அமர்ந்து போராட்டமும் நடத்தி உள்ளார்.
sri reddy
இதனால் இவர் குறித்து பல சர்ச்சைகள் அடுத்தடுத்து எழுந்து வந்தன. இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஷால், நடிகர் ராகவா லாரன்ஸ் என கோலிவுட் பிரபலங்கள் பலரும் பெயர்களும் புகார் பட்டியலில் உள்ளன.
sri reddy
இந்த சம்பவத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஒருவராக ஸ்ரீ சக்தி மாறிவிட்டார் ஆனாலும் இவருக்கு எதிர்பார்க்கப்பட்ட பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தோன்றி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேசி இருந்த ஸ்ரீ ரெட்டி என் அம்மா முன்னால கூட நான் ஆடை மாற்ற மாட்டேன். அப்படிப்பட்ட நான் எல்லோருக்கும் முன்னால் ஆடையை கழட்டி போராட்டம் நடத்திய பொழுது என் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, தம்பிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது.
sri reddy
அவங்களுக்கு அவமானமாய் இருந்திருக்கும் என் கூட யாருமே பேசுறது கிடையாது. என்னைக்கு என் டாப்பை கழட்டினேனோ அன்னைக்கே என்னுடைய மானம் அபிமானம் எல்லாமே போச்சு. நான் 25 பேர் கிட்ட ஏமாந்து இருக்கேன். அவங்க எல்லாருமே சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள்.
நான் நடிகையாக சொல்வது ஒன்றுதான் கதாபாத்திரங்களுக்கு தேவை என்றால் மட்டும் நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள். ஆடியோ விழா, போட்டோ சூட்டில் எல்லாம் அதீத கவர்ச்சி வேண்டாம். சின்ன வயசுல எந்த கவலையும் இல்லாம அம்மா மேல படுத்து தூங்கும். அந்த தருணங்களை அடிக்கடி நினைத்து பார்த்தேன்.
sri reddy
கிளாமர் ரோலில் நடிக்கணும்னு யாரும் வராதீங்க, பத்தாயிரம் பேர்ல ஒருத்தர் தான் இங்கு நிலைக்க முடியும் என் நிலைமையை முன் உதாரணமா எடுத்துக்கோங்க. பெரியவங்க சொல்றத கொஞ்சமாவது கேளுங்க என அட்வைஸ் செய்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.