MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரசவைக்கு தோற்றத்தில் அசால்ட் செய்யும் சூரி..! லாரி கிளீனர் முதல் ஹீரோ வரை உயர்ந்த... ஸ்பெஷல் தொகுப்பு!!

அரசவைக்கு தோற்றத்தில் அசால்ட் செய்யும் சூரி..! லாரி கிளீனர் முதல் ஹீரோ வரை உயர்ந்த... ஸ்பெஷல் தொகுப்பு!!

கஷ்டங்களை கடந்து வராமல் சினிமாவில், அவ்வளவு எளிதில் யாராலும் நிலையான இடத்தை பிடிக்க முடிவது இல்லை. அந்த வகையில் சூரி மட்டும் விதி விலக்கா என்ன? பல்வேறு கஷ்டங்களை கடந்து தான் , காமெடி நடிகராக உயர்ந்து இன்று ஹீரோவாக மாறி இருக்கிறார் சூரி. இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை பற்றிய சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ... 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 27 2021, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

சினிமாவில் மீது சிறு வயதில் இருந்தே அப்படி ஒரு ஈர்ப்பு... கஷ்டத்தில் வாடிய போதும், தன்னுடைய கனவை கை விடாமல், படவாய்ப்புக்காக ஒவ்வொரு புரொடக்ஷன் கம்பெனியாக ஓடாய் தேய்ந்து சிறிய சிறிய வேண்டங்களில் நடித்து இன்று வெற்றிமாறன் படத்தில் ஹீரோ என்கிற முத்திரையை பதித்துள்ளார் நடிகர் சூரி.

29

7 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சூரி, சென்னை போனால் வாய்ப்பு எளிதில் கிடைத்து விடும் என்கிற கனவோடு வந்தவர். நினைத்தது ஒன்றாக இருந்தாலும், நடந்தது வேறு...

39

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் சூழல், ஒரு லாரி கம்பெனியில் கிளீனராக சேர்ந்தார். அங்கு வேலை செய்து கொண்டே... கிடைத்த வேலையெல்லாம் செய்து கொண்டு பட வாய்ப்பை தேட துவங்கினார்.

49

எடுத்ததுமே பட வாய்ப்புகள் கிடைத்து விட வில்லை. மர்மதேசம் சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, திருமதி செல்வம் சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

59

சீரியல் வாய்ப்புகள் நிம்மதியை தந்தாலும், திரைப்பட வாய்ப்புகளை எட்டி பிடிப்பதே... இவருடைய கனவாக இருந்தது. 'காதலுக்கு  மரியாதை' படத்தில் குரூப் டான்சராக வந்தனவர், பின்னர் பல படங்களில் தன்னை அடையாள படுத்திக்கொள்ளாமல் நடித்தார்.

69

சுமார் 15 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பின்பு தான், 'வெண்ணிலா கபடி குழு' வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவரது கதாபாத்திரமும் நன்கு பேசப்பட்டது.

79

மெல்ல மெல்ல தன்னுடைய காமெடி திறமையால் ரசிகர்களை கவர்ந்த சூரி, பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் பிசியாக நடிக்க துவங்கினார்.

89

அந்த வகையில் தற்போது வெற்றி மாறனின் படத்தில் ஹீரோவாகவும் மாறியுள்ளார். விடா முயற்சி இருந்தால்... எந்த சூழ்நிலையிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு நடிகர் சூரி மிகப்பெரிய உதாரணம்.

99

மேலும் இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved